Kamal: "திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?"- கமல் சொன்ன பதில்

2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.

இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலரும் பல கட்சிகளுக்குத் தவினர். இத்தகைய சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக திமுகவுடன் இணைக்கமாக இருந்து வருகிறார். குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன் பல நிகழ்ச்சிகளில், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினராகவும் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்று மாநிலங்களவையில் பங்கேற்று வருகிறார்.

ஸ்டாலின், கமல் ஹாசன்

இன்று (செப்.18) மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ‘திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டாரா கமல்’ என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த கமல், “திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேன் என சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக்கட்சியில் இருந்து வந்தது திமுக, அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான், நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.