பெத் மூனி அதிரடி சதம்…இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவிப்பு

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது. அந்த அணியில் ஜார்ஜியா , எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

ஜார்ஜியா, எல்லிஸ் பெர்ரி அரைசதம் அடித்தனர் .மறுபுறம் பெத் மூனி நிலைத்து விளையாடி சதமடித்து அசத்தினார் . அவர் 75 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார்.

இறுதியில் 47.5 ஓவர்கள் முடிவில் 412 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி ஆட்டமிழந்தது. தொடர்ந்து 413 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.