Asia Cup 2025, India vs Pakistan: ஆசிய கோப்பை 2025 தொடர் தற்போது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சூப்பர் 4 சுற்று நேற்று (செப். 20) தொடங்கியது. முதல் போட்டியே அதிர்ச்சியளிக்கும் வகையில், இலங்கை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றிபெற்றது.
Add Zee News as a Preferred Source
Asia Cup 2025: இன்றும் இந்தியா – பாகிஸ்தான் மோதல்
சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே குரூப் சுற்றில் இரு அணிகளும் மோதியதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றிருந்தது. சூப்பர் 4 சுற்றில் மொத்தமே ஒரு அணிக்கு மூன்று போட்டிகள் எனும்போது ஒவ்வொரு போட்டியும் முக்கியம் வாயந்ததாகும். அதனால், முதலிரண்டு போட்டிகளில் வென்றாலே இறுதிப்போட்டிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடும்.
Asia Cup 2025: சூப்பர் 4 சுற்றில் இந்தியாவின் போட்டிகள்
பாகிஸ்தான் உடன் இந்தியா இன்று மோதும் நிலையில், வரும் செப். 24 (புதன்) அன்று வங்கதேசம் அணியுடனும், வரும் செப். 26 (வெள்ளி) அன்று இலங்கை அணியுடனும் மோதுகிறது. இறுதிப்போட்டி வரும் செப். 28 (ஞாயிறு) அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஓடிஐ ஆசிய கோப்பை தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தாலும், 2022இல் நடந்த டி20 ஆசிய கோப்பையை இலங்கை அணிதான் கைப்பற்றியிருந்தது. இதனால் தற்போது டி20ஐ உலக சாம்பியனான இந்திய அணி, ஆசிய கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.
IND vs PAK: இந்தியா – பாகிஸ்தான் பிளேயிங் லெவன் மாற்றங்கள்
இந்திய அணியை பொருத்தவரை, பேட்டிங் ஆர்டரில் பெரியளவுக்கு வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வளிக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு வாய்ப்ப்பளிக்கப்பட்டது. இன்றைய போட்டியில் பும்ரா, வருண் அணிக்கு திரும்பியதும் அர்ஷ்தீப், ஹர்ஷித் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படும். அக்சர் பட்டேலுக்கு கடந்த போட்டியில் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் உள்ளது. அவர் இல்லையெனில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கலாம். சஞ்சு சாம்சன் கடந்த போட்டியை போல் நம்பர் 3இல் இறங்குவாரா என்ற கேள்வியும் இருக்கிறது. பாகிஸ்தான் அணியும் பிளேயிங் லெவனை மாற்ற வாய்ப்பு குறைவு. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் குஷ்தில் ஷா, ஹரீஸ் ராஃப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இன்றைய போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
Asia Cup 2025: நேரலையில் பார்ப்பது எப்படி?
துபாயில் நடைபெறும் இன்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். டாஸ் இரவு 7.30 மணிக்கு வீசப்படும். இந்த போட்டியை நீங்கள் Sony Sports நெட்வோர்க் சேனல்களின் மூலம் தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம், மேலும், Sony Liv செயலியிலும் நேரலையில் காணலாம், ஆனால் இதற்கு சந்தா செலுத்த வேண்டும். இலவசம் கிடையாது.
IND vs PAK Live: ஜீ தமிழ் நியூஸ் சேனலின் தமிழ் வர்ணனை
இந்தச் சூழலில், இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரலையை பார்க்க இயலாமல் தவிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகம் புதிய ஏற்பாடு ஒன்று செய்திருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் லைவ் ஸ்கோர்கார்டை நீங்கள் தமிழ் வர்ணனையுடன் உங்கள் மொபைலில் இலவசமாக கண்டுகளிக்கலாம். அதாவது, போட்டியை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், வெறும் வர்ணனையை மட்டும் கேட்டால் போதும் என நினைப்பவர்களுக்கு இதன் மூலம் உடனுக்குடன் அப்டேட் கிடைக்கும்.
IND vs PAK Live: லைவ் ஸ்கோர்கார்ட்
லைவ் ஸ்கோர்கார்டில் போட்டியின் ஓவர்கள், பேட்டிங் செய்யும் அணியின் ஸ்கோர், பேட்டர்களின் ரன்கள், பந்துவீசும் பௌலரின் பெயர், எத்தனை பந்துகளில் எத்தனை ரன்கள் அடித்தால் வெற்றி போன்ற அனைத்தும் தகவல்களும் உங்களின் திரையிலேயே தெரியும். பின்னணியில் தமிழ் வர்ணனையுடன் நீங்கள் போட்டி குறித்த தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
IND vs PAK Live: யூ-ட்யூப், பேஸ்புக் நேரலை
ரசிகர்களுக்கு உச்சக்கட்ட கிரிக்கெட் அனுபவத்தை கொடுக்கும் வகையில், பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் வர்ணனையில் ஈடுபடுகிறார். அவருடன் நமது தொகுப்பாளர்களும் இணைந்து போட்டி குறித்த பல்வேறு விஷயங்களை பகுப்பாய்வு செய்வார்கள். இந்த லைவ் ஸ்கோர்கார்டை நீங்கள் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் நேரலையில் காணலாம்.
IND vs PAK Live: நேரலை எப்போது தொடங்கும்?
போட்டி தொடங்குவதற்கு முன்பே ஜீ தமிழ் நியூஸ் லைவ் ஸ்கோர்கார்டு நேரலை தொடங்கிவிடும். போட்டி முடியும் உங்களுடன் நாங்களும் இணைந்திருப்போம். எனவே, போட்டியை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், சந்தா செலுத்த இயலாதவர்கள் இலவசமாக இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் லைவ் ஸ்கோரை உடனுக்குடன் தமிழ் வர்ணனையுடன் தெரிந்துகொள்ள ஜீ தமிழ் நியூஸ் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களுடன் இணைந்திருங்கள். யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் லைவ் லிங்க், நேரலை தொடங்கும் இங்கு கொடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.