பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு – பாஜக சரிபாதி தொகுதிகளில் போட்டி?

புதுடெல்லி: பிஹார் மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தள கட்​சி​யும் பாஜக.​வும் சரி​பாதி தொகு​தி​யில் போட்​டி​யிடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பிஹார் மாநில சட்​டப்​பேர​வை​யில் 243 உறுப்​பினர்​கள் உள்​ளனர். தற்​போது பதவிக் காலம் முடிவ​தால், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. அக்​டோபர் மாதம் முதல் வாரத்​தில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி​களை தலைமை தேர்​தல் ஆணை​யம் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடும் என்று தெரி​கிறது. இந்​நிலை​யில், பிஹாரில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம் (ஐஜத) – பாஜக கூட்​டணி தலை​வர்​கள், தேர்​தல் தொகுதி பங்​கீடு குறித்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

ஐஜத தலை​வரும் முதல்​வரு​மான நிதிஷ்கு​மார் – மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ஆகியோர் பிஹார் தலைநகர் பாட்​னா​வில் கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் பிஹார் தேர்​தல் தொகுதி பங்​கீடு குறித்து ஆலோ​சனை நடத்​தினர். முப்​பது நிமிடங்​கள் நடை​பெற்ற அந்த ஆலோ​சனை கூட்​டத்​தில், துணை முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி, ஐஜத மூத்த தலை​வர்​கள் சஞ்​சய் ஜா, விஜய் குமார் சவுத்ரி உட்பட பலர் பங்​கேற்​றனர்.

மொத்​த​முள்ள 243 தொகு​தி​களில் பாஜக – ஐஜத ஆகிய கட்​சிகள் 100 முதல் 102 தொகு​தி​கள் வரை போட்​டி​யிட கூட்​டத்​தில் ஒரு​மன​தாக ஒப்​புக் கொள்​ளப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள தொகு​தி​களில் எல்​ஜேபி (ராம் விலாஸ்) கட்​சிக்கு கணிச​மான தொகு​தி​களை வழங்க முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், கடந்த 2020-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெற்ற தொகு​தி​களை விட அதிக இடங்​களில் வெற்றி பெறு​வதற்​கான திட்​டங்​களை வகுக்கு ஐஜத – பாஜக தலை​வர்​கள் ஒப்​புக் கொண்​டனர். அதற்​காக ஒன்​றிணைந்து செயல்பட ஒப்​புக் கொண்​டனர்.

இதுகுறித்து ஐஜத – பாஜக கூட்​டணி வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘‘பிஹார் தேர்​தலில் சரி சமமான தொகு​தி​களில் போட்​டி​யிட முடி​வா​னாலும், பாஜக.வை விட ஐஜத ஒன்​றிரண்டு தொகு​தி​களில் கூடு​தலாக போட்​டி​யிடும். அப்​போது​தான் முதல்​வர் வேட்​பாளர் என்ற அளவிலும், கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கும் கட்சி என்ற அந்​தஸ்​துடன் தேர்​தலை சந்​திக்க முடி​யும். சுமார் 100 -102 என்ற எண்​ணிக்​கை​யில் இரு கட்​சிகளும் போட்​டி​யிடும்.

மீத​முள்ள தொகு​தி​கள் எல்​ஜேபி (ராம் விலாஸ்), ஹிந்​துஸ்​தான் அவாமி மோர்ச்சா (ஜிதன்​ராம் மாஞ்​சி), ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (உபேந்​திரா குஷ்​வாஹா) ஆகிய​வற்​றுக்கு வழங்​கப்​படும். என்​டிஏ கூட்​ட​ணிக்கு நிதிஷ் தலைமை வகித்​தா​லும், தேர்​தலில் வெற்றி பெற்​றால், அடுத்த முறை​யும் அவர் முதல்​வர் பதவி​யில் நீடிப்​பாரா என்​பது குறித்து முடி​வாக​வில்​லை’’ என்​றனர். இதற்​கிடை​யில், என்​டிஏ கூட்​ட​ணி​யில் 15 முதல் 20 தொகு​தி​கள் வேண்​டும்​ என்​று ஜிதன்​ ராம்​ மாஞ்​சி வலி​யுறுத்​தி வருகிறார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.