ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பாதி கடலை தாண்டி சூப்பர் 4 சுற்றை எட்டி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் இச்சுற்றில் விளையாடி வருகிறது. இந்த சூழலில், செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் சூப்பர் 4 போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. பாகிஸ்தான் முதலில் 20 ஓவரில் 171 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 58, சைம் அயூப் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 21 ரன்கள் எடுத்திருந்தனர்.
Add Zee News as a Preferred Source
பின்னர் இந்திய அணி 18.5 ஓவரில் 175 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இந்திய அணியில் அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்துத் இம்முறையும் வெற்றியை உறுதிப்படுத்தினர். முன்னதாக கடந்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் டக் அவுட்டான சாய்ம் ஆயுபை நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் 3வது இடத்தில் களமிறக்கியது. அவருக்கு பதிலாக அனுபவ வீரரான ஃபகார் ஜமானை மீண்டும் பாகிஸ்தான் ஓப்பனிங்கில் களமிறக்கியது.
அம்பயர் தவறான தீர்ப்பும் சர்ச்சை
3 பவுண்டரிகளை அடித்த ஃபகார் ஜமான் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தபோது, ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் எட்ஜ் கொடுத்தார். அதனை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்ததாக நினைத்து நடுவர் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். ஃப்கார் ஜமான் முதலில் தரையில் பட்டதாக உணர்ந்து ரீவுயூ எடுத்தார். அப்போது, 3 நடுவர் சோதித்தபோது, முதல் பார்வையில் பந்து தரையில் பட்டதது போல் தெரிந்தது. ஆனால் இரண்டாவது பார்வையில், சஞ்சு சாம்சனின் நுனி விரலில் பட்டு கைக்குள் சொன்றது தெரிந்தது. இதனால் இறுதியாக அவுட் என்ற தீர்ப்பே வழங்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர், பாகிஸ்தானை தோற்றதற்கு அம்பயரிங் தவறானது என்றும், ஃபகார் ஜமான் தொடர்ந்து நிலைத்திருந்தால் போட்டி வேறுபட்டதாயிருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கேமராக்களில் சரியான கோணம் கிடைக்கவில்லை. 26 கேமராக்கள் இருந்தாலும் முக்கிய கோணங்கள் தவறின. இரண்டு கோணங்கள் மட்டுமே பார்த்து அவுட் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஃபகாரின் தொடர்ச்சியான விளையாட்டால் போட்டி வித்தியாசமாக மாறியிருக்கும். அம்பயரிங் தரம் சில நேரங்களில் சிக்கலாக இருக்கிறது. பந்து தரையில் பட்டது, அதன்கீழ் கிளவுஸ் இல்லை என அவர் கூறினார்.
About the Author
R Balaji