பாகிஸ்தானை ஒரே வார்த்தையில் கலாய்த்த சூரியகுமார் யாதவ்! என்ன சொன்னார் தெரியுமா?

ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றில் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. பரபரப்பான இந்த போட்டியில் 172 ரன்கள் எந்த இலக்கை எளிதாக வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்து, கிரிக்கெட் உலகில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இனி ஒரு போட்டியே இல்லை என்றும், பாகிஸ்தான் பலம் வாய்ந்த அணி இல்லை என்றும் அவர் கூறியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

SURYAKUMAR YADAV DROPS A BANGER AT THE PRESS CONFERENCE. 

“You guys should stop asking about the rivalry. If there’s a scoreline of 7-7 or 8-7, then it’s called a rivalry. But if the scoreline is 10-1 or 10-0, it’s not a rivalry anymore”. pic.twitter.com/6VsCOFqAkD

— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 21, 2025

சூர்யகுமாரின் காட்டமான பதில்

நேற்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த போட்டியில், சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், போட்டிக்கு பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த சூர்யகுமார், “இந்த கேள்விக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து நீங்கள் அனைவரும் கேள்வி கேட்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி, அதில் வெற்றி-தோல்வி கணக்கு 7-7 அல்லது 8-7 என்று இருந்தால், அதை ஒரு நல்ல போட்டி. ஒரு உண்மையான போட்டி என்று சொல்லலாம். ஆனால், வெற்றி-தோல்வி கணக்கு 13-0 அல்லது 10-1 என்று ஒருதலைப்பட்சமாக இருந்தால், அதை எப்படி ஒரு சிறந்த போட்டி என்று சொல்ல முடியும்? நாங்கள் அவர்களை விட சிறப்பாக கிரிக்கெட் விளையாடினோம்,” என்று காட்டமாக தெரிவித்தார். கடந்த எட்டு நாட்களில் பாகிஸ்தானை இரண்டு முறை இந்தியா தோற்கடித்த நிலையில், சூர்யகுமாரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

ஒருதலைப்பட்சமான போட்டி

சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணி 171 ரன்கள் அடித்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரின் அதிரடியால் 18.5 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில், சாஹிப்ஸாதா ஃபர்ஹான் நிதானமாக அரைசதம் அடித்தாலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இந்தியாவின் பகுதிநேர பந்துவீச்சாளரான சிவம் துபே, முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் ரன் குவிப்புக்கு தடை போட்டார்.

கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த 31 போட்டிகளில், இந்தியா 23ல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக முன்னிலையில் இருந்தாலும், டி20 போட்டிகளில் 15ல் 11ல் வெற்றி பெற்று இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், சூர்யகுமார் யாதவின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.