ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. லீக் ஆட்டத்தில் இருந்து யுஏஇ, ஓமன், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறிய நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் முன்னேறின. தற்போது சூப்பர் 4 சுற்றும் நாளையுடன் முடிவடைகிறது. இந்தியா அணி இத்தொடரில் இதுவரை தோல்வியையே தழுவாத ஒரு அணியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. சூப்பர் 4 சுற்றில் இருந்து இலங்கை அணி வெளியேறி உள்ளது.
Add Zee News as a Preferred Source
இந்த சூழலில், இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோத இருப்பது பாகிஸ்தானா வங்கதேசமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு விடை நாளைய போட்டியில் தெரிந்துவிடும். இந்திய அணி நேற்று(செப்டம்பர் 24) வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இப்போட்டியின் மூலம்தான் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. வங்கதேசம் அணியை இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில், 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 75 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது பேட்டிங் வரிசையை மாற்றி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடத்தில் சிவம் துபே களமிறக்கப்பட்டார். ஆனால் சிவம் துபே 2 ரன்னில் அவுட்டானார். இதனால் இந்திய அணியின் மொத்த பேட்டிங் வரிசையும் மாறியது. கடைசி வரை சஞ்சு சாம்சனும் களமிறங்கவில்லை. இதனால் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏன் 3வது இடத்தில் சிவம் துபே களமிறக்கப்பட்டார் என்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கப்படாதது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையடுத்து விளையாடிய வங்கதேசம் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், சிவம் துபே-வை 3வது இடத்தில் களமிறக்கியது ஏன் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், வங்கதேசம் அணியில் இடது கை ஸ்பின்னர்கள் அதிகம் உள்ளனர். இதன் காரணமாக சிவம் துபே 7 முதல் 15 ஓவரில் விளையாடுவது சிறந்ததாக இருக்கும் என நான் கருதினேன். ஆனால் அது வேலை செய்யவில்லை. அவுட் ஃபீல்ட் மிகவும் வேகமாக இருந்திருந்தால் நாங்கள் 180 முதல் 185 வரை அடித்திருப்போம். ஆனால் எங்களிடம் இருக்கும் பந்து வீச்சு வரிசைக்கு 12 முதல் 14 ஓவர்களை நன்றாக வீச முடியும் என்ற பட்சத்தில் பெரும்பாலான போட்டிகளை எங்களால் வெல்ல முடியும் என சூர்யகுமார் யாதவ் கூறினார்.
About the Author
R Balaji