ஆசிய கோப்பை தொடரில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேசம் அணியும் மோதின. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்கள் அடித்தனர். தொடக்கத்திலேயே 50 ரன்களுக்கு உள்ளேயே 5 விக்கெட்களை இழந்ததால், பாகிஸ்தான் அணியால் 135 ரன்களைதான் எடுக்க முடிந்தது. தொடக்க வீரர்கள் அனைவருமே ஏமாற்றத்தை கொடுத்தனர்.
Add Zee News as a Preferred Source
அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 31, முகமது நவாஸ் 25 ரன்களை எடுத்தனர். வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்களை எடுத்தார். இதையடுத்து வங்கதேசம் அணி விளையாடியது. அந்த அணியும் மோசமான பேட்டிங்கை செய்தது. 20 ஓவர்களில் 124 ரன்களை மட்டுமே எடுத்ததது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது பாகிஸ்தான் அணி
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பைக்கான இறுதிபோட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நாளை மறுநாள் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதுவரை 41 ஆண்டுகளில் 17 முறை ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளும் முதல் முறையாக மோத இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், நாங்கள் இந்திய அணியை இறுதி போட்டியில் வீழ்த்துவோம் என கூறி இரண்டு காரணங்களை பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், இது போன்ற ஒரு போட்டியை வென்ற நாங்கள் நிச்சயம் ஸ்பெஷல் அணியாக இருக்க வேண்டும் எங்கள் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். பேட்டிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. அதற்காக நாங்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஸ்பெஷல் வீரர் ஷாஹீன் அப்ரிடி அணிக்கு தேவைப்பட்டதை செய்தார். இப்போட்டியிலும் நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்தோம். இருப்பினும் நாங்கள் பந்து வீசிய விதத்தை வைத்து அழுத்தத்தை உருவாக்குவோம்.
புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசினோம், நன்றாக ஃபீல்டிங்கும் செய்தோம். யாரேனும் சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை என்றால், அணியில் இருக்க முடியாது என எங்கள் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறிவிட்டார். எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். அதனால் ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க நாங்கள் உற்சாகமாக உள்ளோம் என சல்மான் ஆகா கூறினார்.
About the Author
R Balaji