ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு நேற்றைய போட்டியில் வங்கதேச அணியை 11 ரன்களில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முன்னேறி இருக்கிறது. இதனால் மீண்டும் இத்தொடரில் 3வது முறையாக இந்திய அணியை சந்திக்க உள்ளது பாகிஸ்தான் அணி. இப்போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 28) நடைபெற உள்ளது. இதுவரை 41 ஆண்டுகளில் 17 முறை ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளும் முதல் முறையாக மோத இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
இத்தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதி உள்ளன. ஒன்று லீக் போட்டி மற்றொன்று சூப்பர் 4 சுற்றில். இரண்டிலுமே இந்திய அணிதான் வென்றது. இதன் காரணமாக இறுதி போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நேற்று வங்கதேசத்தை வீழ்த்திவிட்டு பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா, நாங்கள் இறுதி போட்டியில் இந்திய அணியை வெல்வோம். இக்கட்டாண போட்டியான இதிலேயே நாங்கள் வென்றுவிட்டோம். எனவே நாங்கள் அவர்களை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுவோம் என கூறி உள்ளார்.
மேலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் அவர்களின் அணிக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்திய அணியை வீழ்த்த திட்டம் போட்டுகொடுக்கிறார்கள். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர், அபிஷேக் சர்மாவை முதல் 2 ஓவர்களிலேயே தூக்கிவிட்டால், நீங்கள் வெற்றி பெறலாம என ஐடியா கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், நாங்கள் சொல்வதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், முதல் 2 ஓவர்களில் அபிஷேக் சர்மாவை அவுட் ஆக்கிவிட்டால் இந்திய அணி சிக்கலுக்குள் மாட்டிக்கொள்வார்கள். அபிஷேக் சர்மா வந்த வேகத்தில் திரும்பினால், அவர்கள் அழுத்தத்தை சந்திப்பார்கள். சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா விளையாட மாட்டார் என்ற அர்த்தம் அல்ல. அவர் தவறு செய்வதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள், இந்தியாவின் ஈகோவை கொல்வதற்கு செல்ல வேண்டும் என கூறினார்.
இதுவரை இந்தியாவிடம் தோல்விகளை இரண்டு தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இம்முறை வென்றே ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வருவார்கள். மறுபுறம் இந்திய அணி இரண்டு முறை வீழ்த்திவிட்டோம் இம்முறையும் அவர்களை வீழ்த்திவிடலாம என எளிதாக எண்ணாமல் சற்று எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனவே என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சயீம் அய்ரூப்டி, சல்மான் அய்ரூப்டி மொகிம்.
About the Author
R Balaji