ஹோண்டா இந்தியாவின் ரெட்ரோ கிளாசிக் ஸ்டைலை பெற்ற CB350 இப்பொழுது CB350C என மாற்றப்பட்டு சிறப்பு எடிசனை ரூ.2,01,900 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முன்பதிவு தற்பொழுது பிக்விங்க் டீலர்கள் வாயிலாக துவங்கப்பட்டு டெலிவரி அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
CB350C ஸ்பெஷல் எடிசனில் கருப்பு அல்லது பிரவுன் என இரு விதமான நிறங்களை இருக்கை தேர்வில் வழங்கியுள்ளதால் வாடிக்கையாளர் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய முடியும் அதே நேரத்தில் ரீபெல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் டன் பிரவுன் என்ற இரு நிறங்களை பெற்றுள்ளது.
முந்தைய சிபி 350 மாடலை காட்டிலும் சற்று மாறுபட்ட பாடி கிராபிக்ஸ் ஆனது சிபி350சி பைக்கின் டேங்க், இருபக்க ஃபென்டரிலும் வழங்கப்பட்டு புதிய CB350C லோகோ பேட்ஜிங், ஸ்பெஷல் எடிசன் ஸ்டிக்கரிங் , க்ரோம் கிராப் ரெயில் ஆகியவற்றுடன் வழக்கமான மெக்கானிக்கல் பாகங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது.
வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்று டிஜி ஆனலாக் முறையிலான கிளஸ்ட்டருடன் ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி, கனெக்ட்டிவ் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது பெற்றுள்ளது.
ஹோண்டாவின் செலக்டபிள் டார்க் டார்க் கண்ட்ரோல் பெற்றிருப்பதுடன் தொடர்ந்து 348.36cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு 21bhp பவர் 5,500rpm-லும் 29.5Nm டார்க்கினை 3,000rpm-ல் வழங்குவதுடன் 5 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா 350 உள்ளிட்ட மாடல்கள் கிடைக்கின்றது.