அக்சர் படேலை விட இந்த பாகிஸ்தான் வீரர்தான் சிறந்தவர்.. முன்னாள் வீரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இத்தொடரில் இறுதி போட்டி நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

Add Zee News as a Preferred Source

இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே பல முன்னாள் பாகிஸ்தானி வீரர்கள் இந்திய அணியின் வீரர்களை நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களால் விமர்சித்து வருகின்றனர். அதில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், இந்தியாவின் இடது கை சுழல் பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலை மற்றொரு புகழ்பெற்ற பாகிஸ்தானி ஆல்ரவுண்டர் முகமது நவாஸுடன் ஒப்பிடுகையில், முகமது நவாஸ் சிறந்த வீரர் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய சோயிப் அக்தர், “முகமது நவாஸ் இந்தியா அணியில் உள்ள அக்சர் பட்டேலை விட சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். அவர் பாகிஸ்தான் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறந்த பந்து வீச்சும் மற்றும் பேட்டிங் திறனும் வெளிப்படுத்தி வருகிறார். எடுத்துக்காட்டாக, சூப்பர் 4 சுற்றில் வங்கேதச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மையக் கதாப்பாத்திரமாக இருந்தார். தனது நேர்த்தியான ஆட்டத்தால் அணிக்கு திருப்புமுனை கொடுத்தார்.” என அவர் தெரிவித்தார். 

சோயப் அக்தரின் இந்த கருத்து இந்திய ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அக்சர் படேலுக்கு ஆதரவாக அவரது சாதனைகள் மற்றும் திறமையை உறுதிபடுத்தும் வகையில் பல்வேறு விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர். 

ஆசிய கோப்பை இறுதி போட்டி

இந்திய அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ரானா, ரிங்கு சிங். 

பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சயீம் அய்ரூப்டி, சல்மான் அய்ரூப்டி மொகிம். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.