​​​​​​​கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? – முழு விவரம்

கரூர்: கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 36 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த சம்​பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் நேற்​றிரவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். முன்​ன​தாக காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்​சா​ரம் செய்ய காவல் துறை தரப்​பில் அனு​மதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், நாமக்​கல்​லில் பிரச்​சா​ரம் செய்​து​விட்டு பிற்​பகல் 3 மணிக்​குப் பிறகு​தான் விஜய் அங்​கிருந்து கிளம்​பி​னார்.

இதற்​கிடையே, கரூர் வேலு​சாமிபுரத்​தில் பகல் 12 மணி முதலே தொண்​டர்​கள், ரசிகர்​கள் திரள ஆரம்​பித்​தனர். கரூர் மாவட்ட எல்​லை​யான வேலா​யுதம்​பாளை​யத்​தில் இருந்தே கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் பிரச்​சா​ரப் பேருந்து மிக​வும் மெது​வாக நகர்ந்​தது. இதனால் இரவு 7.15 மணிக்​கு​தான் பிரச்​சார இடத்​துக்கு விஜய் வர முடிந்​தது.

அங்கு விஜய் பேச ஆரம்​பித்​த​போது, அவரது மைக் வேலை செய்​ய​வில்​லை. அவரது பேச்​சைக் கேட்​ப​தற்​காக பின்​னால் இருப்​பவர்​கள் நெருங்​கியடித்​த​படி பிரச்​சா​ரப் பேருந்தை நோக்கி வந்​தனர். இதனால் முன்​னால் காத்​திருந்​தவர்​கள் நெரிசலில் சிக்​கினர். விஜய் பேசிக் கொண்​டிருந்​த​போதே மூச்​சுத் திணறி பலர் அடுத்​தடுத்து மயங்கி விழத் தொடங்​கினர். மேலும், அப்​பகு​தி​யில் இருந்த மரக்​கிளை உடைந்து விழுந்​த​தி​லும் சிலர் காயமடைந்​தனர். விஜய் பிரச்​சா​ரத்தை முடித்து கிளம்​பிய பின்​னரே அவர்​களை மீட்க முடிந்​தது.

அங்​கிருந்து ஆம்​புலன்ஸ் மூலம் மீட்​கப்​பட்ட பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்​டோர் கரூர் காந்தி கிராமத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, கோவை சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இவர்​களில் 8 குழந்​தைகள், 16 பெண்​கள் உட்பட மொத்​தம் 36 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​கள் அனை​வரின் உடல்​களும் கரூர் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை பிரேதப் பரிசோதனைக் கூடத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளன. 40-க்​கும் அதி​க​மானோர் சிகிச்​சை​யில் உள்​ளனர். இதில் சிலர் கவலைக்​கிட​மான நிலை​யில் உள்​ளனர்.

உயி​ரிழந்​தவர்​கள், சிகிச்​சை​யில் உள்​ளோரின் குடும்​பத்​தினரும், உறவினர்​களும் மருத்​து​வக் கல்​லூரி முன்பு குழு​மி​யுள்​ளனர். அவர்​கள் கதறி அழுது துடித்​த​தால் அப்​பகுதி முழு​வதும் சோகமய​மாக காட்​சி​யளித்​தது.

தலைகுனிந்​த​படி சென்ற விஜய்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயங்​கிய​தாக தகவல் தெரிய​வந்​ததும், பேச்சை சுருக்​க​மாக முடித்​துக் கொண்ட விஜய், அங்​கிருந்து திருச்​சிக்கு புறப்​பட்​டார். கார் மூலம் திருச்சி வி​மான நிலை​யத்​துக்கு வந்த விஜ​யிடம் செய்​தி​யாளர்​கள், ‘‘கரூரில் உங்​கள் பிரச்​சா​ரத்​துக்கு வந்​தவர்​களில் கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்​கும் அதி​க​மானோர் உயிரிழந்​துள்​ளார்​களே?’’ என கேட்​ட​போது, எந்​த கருத்​தும்​ கூறாமல்​, தலை​யைக்​ குனிந்த படி சென்​றார்​.

கரூர் சம்​பவம் குறித்து தகவலறிந்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், உடனடி​யாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை தொடர்​பு​கொண்​டு, பாதிக்​கப்​பட்​டோரை மீட்​க​வும், அவர்​களுக்கு உரிய மருத்​துவ சிகிச்சை அளிக்​க​வும் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, 50-க்​கும் அதி​க​மான ஆம்​புலன்​ஸ்​கள் சம்பவ இடத்​துக்கு சென்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களை மீட்​டன. அவர்​களுக்கு உரிய சிகிச்சை அளிப்​ப​தற்​கான பணி​களை மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் இருந்​த​படி செந்​தில் பாலாஜி தீவிரப்​படுத்​தி​னார். இதற்​கிடை​யில், நேற்று இரவு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கரூருக்​குப் புறப்​பட்​டார்.

தலை​வர்​கள் இரங்​கல்: கரூர் சம்​பவத்​துக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

ரூ.10 லட்​சம் நிவாரணம்: கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.10 லட்​சம், காயமடைந்​தவர்​களுக்கு ரூ.1 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​துள்​ளார். மேலும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்க முன்​னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மை​யில் விசா​ரணை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.