கரூர்: `விஜய் பரப்புரையில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு' – அமித் ஷா இரங்கல்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதாலும், நிகழ்ச்சியைத் தொடங்க தாமதம் ஏற்பட்டதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 31-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கரூர்: மருத்துவமனையில் பரபரப்பு
கரூர்: மருத்துவமனையில் பரபரப்பு

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

கரூர்: விஜய் பரப்புரையில் பலர் உயிரிழப்பு - அமித் ஷா இரங்கல்
கரூர்: விஜய் பரப்புரையில் பலர் உயிரிழப்பு – அமித் ஷா இரங்கல்

செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் சென்ற விஜய்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கிய 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார்.

58-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் திருச்சி விமான நிலையம் வந்த நடிகர் விஜய், செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.