லடாக்:
லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வன்முறையானது. இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில். லடாக் டிஜிபி சிங் ஜம்வால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சோனம் வாங்சுக் கைது பற்றி அவர் விளக்கம் அளித்தார். அப்போது டிஜிபி சிங் ஜம்வால் கூறியதாவது:
சமீபத்தில், நாங்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவரை கைது செய்தோம். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சோனம் வாங்சுக் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவல் எங்களிடம் உள்ளது. சோனம் வாங்சுக் பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் வங்கதேசத்துக்கும் பயணம் செய்தார். அவர் மீது பல கேள்விகள் உள்ளன. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் 24-ம் தேதி வன்முறையை தூண்ட அவர் காரணமாக இருந்தார்.வன்முறை நிகழ்ந்த இடத்தில் நேபாளத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால் தற்போது எதையும் கூற முடியாது. இதுபற்றி விசாரித்து வருகிறோம்” என்றார்.