போலி என்கவுன்ட்டர் புகாரால் மாவோயிஸ்ட் கமாண்டர் உடலை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: போலி என்​க​வுன்​ட்டர் என புகார் அளிக்​கப்​பட்​ட​தால், மாவோ​யிஸ்ட் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி​யின் உடலை பாது​காத்து வைக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சத்​தீஸ்​கரின் நாராயண்​பூர் மாவட்​டத்​தில் பாது​காப்பு படை​யினர் கடந்த 22-ம் தேதி நடத்​திய என்​க​வுன்ட்​டரில் 2 மாவோ​யிஸ்ட்​கள் கொல்​லப்​பட்​டனர். இவர்​களில் ஒரு​வர் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி. ஆனால், போலி என்​க​வுன்​ட்டரில் தனது தந்தை கொல்​லப்​பட்​டதாக கதா ராமசந்​திர ரெட்​டி​யின் மகன் ராஜ சந்​தி​ரா குற்றம்சாட்டினார்.

இது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என சத்​தீஸ்​கர் உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு செய்​தார். ஆனால் பண்டிகை விடு​முறை காரண​மாக, அங்கு அவரது மனு அவசர​மாக விசா​ரிக்​கப்​பட​வில்​லை. இதனால் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு செய்​தார். இவரது மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் திபாங்​கர் தத்​தா, ஏ.ஜி.​மாசிஹ் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, கதா ராமசந்​திர ரெட்டி உடல் மட்​டும் மருத்​து​வ​மனை​யில் உள்​ளது. பிரேதப் பரிசோதனை வீடியோ​வில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதில் போலீ​ஸார் மீது குற்றம் சுமத்த முடி​யாது” என்​றார். இதையடுத்து இந்த விஷ​யத்​தில் சத்​தீஸ்​கர் நீதி​மன்​றம் முடிவு எடுக்​கும்​வரை, கதா ராமசந்​திர ரெட்​டி​யின் உடலை எரிக்​காமல் பாது​காத்​து வைக்​க வேண்​டும்​ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.