'கரூரில் எனக்கு எந்த ஒரு நண்பரும் இல்லை; வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- கயாடு லோஹர் விளக்கம்

“என் ஆழ்ந்த இரங்கலை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தவெகவின் சுயநல அரசியலுக்காக கரூர் கூட்டத்தில் நான் மிகவும் நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன். விஜய், மக்கள் உங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கான பொம்மைகள் அல்ல.

உங்கள் பேராசைக்காக இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக இருக்கிறதோ?” என்று கரூர் கூட்ட நெரிசல் குறித்து நடிகை கயாடு லோஹர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது போல் பதிவு ஒன்று இணையத்தில் வைரலானது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இந்நிலையில் அந்த எக்ஸ் தள கணக்கு போலியானது என்று கயாடு லோஹர் விளக்கம் அளித்திருக்கிறார்.

தற்போது கயாடு லோஹர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” என் பெயரில் பதிவுகள் வெளியிட்டு வரும் அந்த எக்ஸ் தள கணக்கு போலியானது. அதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அங்கே வெளியிடப்படும் கருத்துகள் என்னுடையது அல்ல.

கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இதயம் கனிந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், எனக்கு கரூரில் எந்தவொரு நண்பரும் இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். என் பெயரில் பரப்பப்படும் அந்த செய்தி முற்றிலும் தவறானது.

தயவுசெய்து அந்தத் தவறான தகவலை நம்பவோ பரப்பவோ வேண்டாம். துயரத்தில் உள்ள குடும்பங்களுக்காக என் பிரார்த்தனைகள் தொடரும்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.