IND vs PAK Final: பிளேயிங் லெவன் 3 மாற்றங்கள்… இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு!

India vs Pakistan Final: ஆசிய கோப்பை 2025 இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது.

Add Zee News as a Preferred Source

நடப்பு தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 2 முறை மோதி உள்ளது. முதல் போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்றது. தொடர்ச்சியாக மூன்று ஞாயிற்றுக்கிழமையில் தற்போது இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி குரூப் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமன் உள்ளிட்ட அணிகளை குரூப் சுற்றில் வென்று; சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகளை வீழ்த்தி தோல்வியே இல்லாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் அணி ஓமன், ஐக்கிய அமீரகம் அணியை குரூப் சுற்றில் வென்று; வங்கதேசம், இலங்கை அணியை சூப்பர் 4 சுற்றில் வென்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இந்தியாவிடம் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது. 

இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9 முறையாக கோப்பையை வெல்ல இந்தியா திட்டமிட்டிருக்கும். 2016இல் டி20ஐ வடிவிலான ஆசிய கோப்பையை இந்தியா வென்றது, கடைசியாக 2023இல் ஓடிஐ ஆசிய கோப்பையை இந்தியா வென்றிருந்தது. பாகிஸ்தான் அணி 2000 மற்றும் 2012இல் ஆசிய கோப்பையை வென்றிருந்தது. டி20ஐ ஆசிய கோப்பையை வென்றதில்லை. சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் கோப்பையை வெல்ல துடிக்கும். 

அந்த வகையில், ஆசிய கோப்பை 2025 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்களால் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு பதில் ரிங்கு சிங், சிவம் தூபே, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணி எந்த மாற்றமும் செய்யவில்லை. 

Teams get game-ready for one last time this tournament. 

Will Abhi-Gill star for India yet again or will the fiery duo of Shaheen-Rauf break the back of the opposition’s batting?#INDvPAK #DPWorldAsiaCup2025 #Final #ACC pic.twitter.com/Yqa5su6VMH

— AsianCricketCouncil (@ACCMedia1) September 28, 2025

இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா இல்லை. அவருக்கு பதில் ரிங்கு சிங் வந்துள்ளார். தூபே, பும்ரா வழக்கம்போல் பிளேயிங் லெவனில் இருப்பவர்கள். தற்போதைய சூழலில் இந்திய அணியின் பேட்டிங் ஆப்ஷன் நம்பர் 8 வரை உள்ளது. ஆனால், பந்துவீச்சு ஆப்ஷன் 5 வீரர்களே உள்ளனர். அபிஷேக் சர்மாவை ஓரிரு ஓவர்கள் வீச வைக்க வாய்ப்புள்ளது. இதனால் பந்துவீச்சில் சிக்கல் வரலாம். தூபே மற்றும் பும்ரா மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்கள் ஆவர். 

பும்ரா மட்டுமே டெத் ஓவரில் கைக்கொடுக்கும் வீரராக இருப்பார். தூபே மிடில் ஓவரோடு டாட்டா காட்டிவிடுவார். இதனால், டெத் ஓவர்களிலும் பாகிஸ்தான் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் 190 ரன்களை குவித்தால் இந்திய அணியால் சேஸிங் செய்வது கடினமாகிவிடும். அர்ஷ்தீப் சிங்கை இந்திய அணி விளையாட வைத்திருக்க வேண்டும்.

பிளேயிங் லெவன்

பாகிஸ்தான்: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ் (விக்கெட்  கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப், அப்ரார் அகமது

இந்தியா: அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி 

About the Author


Sudharsan G

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.