கரூர்: நடிகர் விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதி, மருத்துவமனை என பல பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடமும், பொதுமக்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெததீசன் நேற்று முதல்நாளாக, கரூர் சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் விசாரணை நடத்திய நிலையில், 41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு […]
