தங்​கம் விலை வரலாறு காணாத புதிய உச்​சம்: பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.86,160-க்கு விற்​பனை

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ஒரே​நாளில் இரு​முறை உயர்ந்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்​து, ரூ.86,160-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. அதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம், செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது.

இதன் பிறகு, இரண்டு நாட்​கள் தங்​கம் விலை குறைந்​திருந்த நிலை​யில், கடந்த 26, 27 ஆகிய தேதி​களில் தங்​கம் மற்​றும் வெள்ளி விலை அதிரடி​யாக உயர்ந்​தது. குறிப்​பாக, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்​சத்​தைத் தொட்​டது. ஒரு பவுன் தங்​கம் விலை ரூ.85,120 ஆக இருந்​தது. இந்​நிலை​யில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று காலை​யில் பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.85,600 ஆக இருந்​தது. இது மாலை​யில் மேலும் உயர்ந்​தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.86,160 ஆக இருந்​தது.

ஒட்டு மொத்​த​மாக, நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.86,160 என்ற புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. ஒரு கிராம் தங்​கம் ரூ.130 உயர்ந்​து, ரூ.10,770-க்கு விற்​கப்​பட்​டது.இது​போல, வெள்ளி கிரா​முக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 அதி​கரித்​து ரூ.1.60 லட்சமாகவும் இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.