ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்; இந்திய முன்னணி வீரர் விலகல்..? – வெளியான தகவல்

புதுடெல்லி,

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் அக்டோபர் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது.

அதனை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.அவர் ஆசிய கோப்பை தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் கடைசி 2 போட்டிகளில் பாண்ட்யா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.