கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கரூர் சம்பவத்தில் திமுக அரசுமீது வதந்தி பரபப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில், தவெகக்கு எதிரான போஸ்டர்களை திமுகவினர் ஒட்டச்சொன்னதாகவும் வீடியோ வெளியானது. இதனால், இந்த சம்பவத்தில் திமுகவுக்கு தொடர்பு இருக்கலாம் என சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. […]
