சர்வர் பிரச்சினையால் முடங்கிய சார்பதிவாளர் அலுவலகங்கள்: பலமணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்

சென்னை: தமிழகம் முழு​வதும் சர்​வர் பிரச்​சினை​யால் சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் பத்​திரப்​ப​திவு நடை​பெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்​களு​டன் காத்​திருந்த பொது​மக்​கள் மிகுந்த அவதிக்​குள்​ளாகினர்.

தமிழகம் முழு​வதும் 11 பதிவு மண்​டலங்​களில் 56 பதிவு மாவட்​டங்​களின்​கீழ், 587 பதிவு அலு​வல​கங்​கள் செயல்​பட்டு வரும் சூழலில், சில நேரங்​களில் சர்​வர் பிரச்​சினை​யால் பதிவுப்​பணி​கள் முடங்​கி, பொது​மக்​கள் பாதிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், கடந்த சனிக்​கிழமை முதலே பொது​மக்​கள் பதிவு ஆவணங்​கள் உள்​ளீடு செய்​தல் மற்​றும் டோக்​கன் பெறும் போர்ட்​டலில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று திங்​கள்​கிழமை காலை முதலே, சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் பதிவுப்​பணி​கள் முடங்​கின. சர்​வர் பிரச்​சினை​யால் ஆவணங்​களை பதிவு செய்ய முடி​யாமல், பதிவு அலு​வலர்​கள் திணறினர். இதனால், காலை முதல் வரிசை​யாக டோக்​கன் அடிப்​படை​யில் காத்​தி ருந்த பொது​மக்​கள் மிகுந்த சிரமத்​துக்​குள்​ளாகினர்.

இதையடுத்​து, பதிவுத்​துறை தலைமை அலு​வல​கத்​தில் சர்​வரை சரிசெய்​யும் பணி​யில், அதனை பராமரிக்​கும் தனி​யார் நிறு​வனத்தினர் ஈடு​பட்​டனர். இந்​நிலை​யில் நேற்று மாலை 4.30 மணி​யள​வில் ஓரளவு சீரான நிலை​யில், பதிவுப்​பணி​கள் தொடங்​கின. வழக்​க​மாக சில நிமிடங்​களில் முடிய வேண்​டிய ஒரு பதிவுக்​கான கால அவகாசம் 10 முதல் 15 நிமிடங்​கள் வரை ஆனது.

இதுகுறித்​து, பதிவு அலு​வலர்​கள் கூறிய​தாவது: சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் நேற்று காலை முதலே பதிவுக்​காக பொது​மக்​கள் காத்​திருந்​தனர். அடுத்​தடுத்து விடு​முறை வரு​வ​தால், வழக்​கத்​தை​விட அதி​க​மாக டோக்​கன்​கள் பெற்​று, பதிவுக்கு விண்​ணப்​பித்​திருந்​தனர். ஆனால், சர்​வர் பிரச்​சினை​யால் அவர்​களுக்கு உடனே பதிவு செய்து தர இயல​வில்​லை.

இதுகுறித்து உயர் அதி​காரி​களுக்கு நாங்​கள் தகவல் அளித்​தோம். அதன்​பின், மாலையே நிலைமை ஓரளவு சீரடைந்​தது. இருப்​பினும், கணினி மிக​வும் மெது​வாக இயங்​கிய​தால், ஒரு பதிவுக்கே 15 நிமிடங்​கள் வரை ஆனது. இதனால், பதிவுக்கு டோக்​கன் பெற்ற பலரும் திரும்​பிச் சென்​றனர். அவசர பணி​யாக பதிவுக்கு வந்​தவர்​களுக்கு மட்​டும் பதிவுப்​பணி​களை முடிக்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டது. வரு​வாய் அதி​கள​வில் ஈட்​டப்​படும் பதிவுத்​துறை​யில் சர்​வர் பிரச்​சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், பதிவுத்​துறை​யின் கணினி மென்​பொருள் மற்​றும் சர்​வர் பராமரிப்பை மேற்​கொள்​ளும் நிறு​வனத்​துக்​கு, இனி இது போன்ற சிக்​கல் ஏற்​ப​டாத வகை​யில் சீரமைப்​பு பணி​களை விரை​வாக முடிக்​க, பதிவுத்​துறை நிர்​வாகம்​ உத்​தர​விட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.