சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ந்தேதி அரசு முறை பயணமாக ராமநாதபுரம் செல்லும் நிலையில், வழக்கமாக நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியூர் பயணத்தின்போது மேற்கொள்ளும் ரோடு ஷோ நிகழ்ச்சி கிடையாது, அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
