ராகுலுக்கு கொலை மிரட்டல்: பாஜகவுக்கு 3 கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்

புதுடெல்லி: ராகுல் காந்​திக்கு கொலை மிரட்​டல் விடுத்​ததாக காங்​கிரஸ் கட்சி குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. இதையடுத்​து,
பாஜக​வுக்கு காங்​கிரஸ் 3 முக்​கிய கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது.

இதுகுறித்து காங்​கிரஸ் கட்சி எக்ஸ் தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: தொலைக்​காட்சி விவாதத்​தின்​போது பாஜகவைச் சேர்ந்த பிந்து மகாதேவ், ராகுல் காந்​திக்கு வெளிப்​படை​யாக கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளார். முதலா​வ​தாக, இது மக்​கள் தலை​வர் ராகுல் காந்திக்கு எதி​ராக தீட்​டப்​படும் ஒரு மிகப்​பெரிய தீய சதி திட்​ட​மா? இரண்​டாவது, மிரட்​டல், வன்​முறை, கொலை மிரட்​டல் வழி​யான அரசி​யலை பாஜக ஆதரிக்​கிற​தா? மூன்​றாவது, அரசின் நிர்​வாகத்தை விமர்​சிக்​கும் அரசி​யலமைப்பு பொறுப்​பில் உள்ள மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் மற்​றும் பிற எதிர்க்​கட்சி தலை​வர்​களுக்கு எதி​ரான வன்​முறையை இயல்​பான ஒன்​றாக்க பாஜக முயல்​கிற​தா? என்ற 3 கேள்வி​களுக்கு விடை காண காங்​கிரஸ் விரும்​பு​கிறது.

இந்த கொலை மிரட்​டல் சட்​டத்​தின் ஆட்​சி​யின் மீதும், ஜனநாயகத்​தின் பாது​காப்​புக்​கும், ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் பாது​காப்பை உறுதி செய்​யும் அரசி​யலமைப்​பின மீதும் நடத்​தப்​பட்ட நேரடி தாக்​குதல். இவ்​வாறு காங்​கிரஸ் தெரி​வித்​துள்​ளது. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி. வேணுகோ​பால், உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.