ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

மேக்ஸி ஸ்டைல் பெற்ற அட்வென்ச்சருக்கு ஏற்ற ஜூம் 160 ஸ்கூட்டர் ஜனவரி 2025ல் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருவதனால் விநியோகம் நடப்பு செப்டம்பரில் துவங்க உள்ளதாக தனது சமூக ஊடகப்பக்கங்களில் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜூம் 160 ஆனது பிரீமியா ஹீரோ டீலர்களில் மட்டுமே கிடைக்கும் என்பதனால் முக்கிய நகரங்களில் மட்டுமே முதற்கட்டமாக டெலிவரி வழங்கப்பட உள்ளது. ஏரோக்ஸ் 155 மற்றும் வரவிருக்கும் என்டார்க் 150 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற ஜூம் 160ல் லிக்யூடு கூல்டு … Read more

தெரு நாய்க்கு கார் கம்பனியில் வேலை! இந்த அதிசயத்தை பாருங்களேன்!

Street Dog Became Salesman: ஒரு தெருநாய் எப்படி கார் விற்பனையாளர் ஆனது தெரியுமா? Hyundai ஷோரூமில் நடந்த இந்த சம்பவம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!

Gold Loan: தங்கம் விலை மட்டுமல்ல, தங்க நகை அடமானக் கடனும் எகிறுதுங்கோ! என்னதான் காரணம்?

தங்கம் விலை ஒருபக்கம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்க, மக்கள் மேலும் மேலும் தங்கத்தை வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கம் விலை என்றைக்கு அபாரமாக உயர்கிறதோ, அன்றைக்கெல்லாம் தங்க நகைக் கடைகளில் அதிகமான கூட்டத்தையே பார்க்க முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மக்கள் தங்களிடம் இருக்கும் நகையை வங்கிகள், வங்கி அல்லாத நிறுவனங்களில் அடமானம் வைத்து பணம் பெறுவதும் ஏகத்துக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தை அடமானமாக வைத்துப் பணம் பெறுவது 122% அதிகரித்திருக்கிறது. தங்க … Read more

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? – சென்னை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்துவது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரகாஷ் கர்காவா அடங்கிய அமர்வு கூறியதாவது: பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி வலியறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஞ்சாபில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான … Read more

“உலகின் வசமுள்ள தெரிவு… அமைதி அல்லது போர்!” – ராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை

பெய்ஜிங்: அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த … Read more

ஒயாத வரதட்சணை கொடுமை! இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..நடந்தது என்ன?

Bengaluru Woman Died Dowry Harassment : பெங்களூருவில், இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உடல் மெலிந்த Rock! எப்படி இருந்தவரு..எப்படி ஆயிட்டாரு-வைரல் போட்டோ

Dwayne Johnson Weight Loss : வெனிஸ் திரைப்படவிழாவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சனின் தோற்றம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு மழை.. தமிழகத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!

Tn Rain Alert: சென்னையில் இன்று நாளையும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Coolie: "நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது எனக் கூறவில்லை; ஆனால்" – லோகேஷ் கனகராஜ் பளீச்

‘மாநகரம், ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்துடன் இணைந்து எடுத்த ‘கூலி’ படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை பார்வையாளருடன் அமர்ந்து கூலி படத்தைப் பார்த்திருந்தார். ரஜினிகாந்த், உபேந்திரா, நாகர்ஜுனா, அனிருத் இசை எனப் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த கூலி படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்புக் கிளம்பியிருந்தது. ரஜினி – லோகேஷ் கனகராஜ் – கூலி Coolie: `Mudichidlam Ma’ – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த … Read more