வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (செப்.2) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும், நாளை மறுதினமும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு … Read more

“வாக்காளர் அதிகார யாத்திரைக்கு மிகப் பெரிய வரவேற்பு!” – தேஜஸ்வி யாதவ் விவரிப்பு

பாட்னா: தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார். வாக்காளர் அதிகார யாத்திரையின் இறுதி நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “வாக்காளர் அதிகார யாத்திரையின்போது கிடைத்த ஆதரவு மிகப் பெரியது. மக்கள் பிஹாரில் இருந்து தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை அரியணையில் இருந்து அகற்றுவார்கள். இந்திய தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. நாட்டு மக்களிடம் பாஜக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களை அதிகாரத்தில் … Read more

எஸ்சிஓ உச்சிமாநாடு பிரகடனத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம்

தியான்ஜின்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ ) பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் … Read more

வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்தை மூட என்ன காரணம்? – ஷாக்கில் கோலிவுட்

Vetrimaran Latest News: Bad Girl திரைப்படத்தோடு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

பட்டாவில் பெயர் சேர்க்க லட்சக்கணக்கில் லஞ்சம்: தாசில்தார், துணை வட்டாட்சியர், விஏஓ மீது பரபரப்பு புகார்

தாசில்தார், துணை வட்டாட்சியர், விஏஓ ஆகியோர் பட்டாவில் பெயர் சேர்க்க லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட  வழக்கறிஞர் ஒருவர் அவர்கள் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சஞ்சு சாம்சன் ஓபனர்… கில் நம்பர் 3 – இந்திய அணிக்கு இதுதான் நல்லது – ஏன்?

Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன், சுப்மான் கில் இருவரும் இருப்பது பெரும் கேள்விகளை எழுப்பியிருக்கும் சூழலில், இவர் பிளேயிங் லெவனில் எந்த ஆர்டரில் விளையாட வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.  Add Zee News as a Preferred Source ஆசிய கோப்பை தொடர் வரும் செப். 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற இருக்கிறது. செப். 28ஆம் தேதி தொடர் பரபரப்பான … Read more

Bad Girl: "எத்தனையோ மோசமான படங்களுக்கு கை தட்டி, விசில் அடித்திருப்போம்; அதனால்" – மிஷ்கின்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘BAD GIRL’. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது. `BAD GIRL’ படம் இதில் … Read more

Flipkart Big Billion Days Sale 2025: தேதி, சலுகை விவரங்கள் இதோ

Flipkart Big Billion Days Sale 2025: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் இன்னும் சில நாட்களில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸ் சேல் 2025 தொடங்கவுள்ளது. கனவு கேஜெட்களை வாங்கவும் வீட்டு உபகரணங்களை அப்கிரேட் செய்யவும் சரியான நேரத்திற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு விரைவில் முடிவடையும்.  Add Zee News as a Preferred Source பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸ் சேல் 2025 Flipkart நிறுவனம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart Big Billion … Read more

உதயநிதி ஸ்டாலின் மீதான சனாதன வழக்கு 2026க்கு ஒத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் தாராளம்….

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி மீதான  சனாதன தர்மம் குறித்த வழக்கின் விசாரணை 2026 பிப்ரவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விரிவான விசாரணைக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்திய நிலையில், அவர்மீது தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து உதயநிதி தாக்கல் செய்த மனுவில், மற்ற மாநிலங்களில் உள்ள மனுவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும், தன்மீதான … Read more

7.8% வளர்ந்த இந்தியாவின் GDP; இது தொடருமா? – இப்போதாவது மத்திய அரசு GST-ஐ குறைக்கிறதே! | Explained

கடந்த வெள்ளிக்கிழமை தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2025-26 நிதியாண்டில், முதல் காலாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.8 சதவிகிதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வாகும். 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.4 சதவிகிதம் ஆகும். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் உற்பத்தி திறன் 6.7 சதவிகிதம் ஆகும். எப்படி பார்த்தாலும், இந்தக் காலாண்டின் மொத்த … Read more