போஸ்டர் ஒட்டினால் அபராதமா? – மதுரை மாநகராட்சி தீர்மானத்துக்கு சிபிஎம் கண்டனம்

மதுரை; “நகரின் அழகு குறைவதால், போஸ்டர்கள் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சி கூட்டம் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு குறைவதாகவும், குப்பைகள் அதிகமாவதாகவும், மாநகராட்சிக்கு … Read more

Bihar SIR: செப்.1-க்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் கோரலாம்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: செப்.1-க்குப் பிறகும் பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமை கோரலாம், ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், ஆட்சேபம் தெரிவிக்கவும் செப்.1-ம் தேதி கடைசிநாள் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் … Read more

ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (செப்.1) ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், … Read more

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

Tn Weather Update: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 01) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

லலித் மோடிக்கு பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங்! வீடியோ சர்ச்சைக்கும் விளக்கம்

Harbhajan Singh : இந்தியப் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில், 2008 ஆம் ஆண்டு நடந்த ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் (Slapgate) மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஐபிஎல்-லின் முன்னாள் தலைவர் லலித் மோடி, 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கும் ‘பியான்ட் 23’ என்ற நிகழ்ச்சியில் லலித் மோடி கலந்து கொண்டார். அப்போது இந்த சம்பவம் … Read more

Vaadivaasal: 'இன்னும் 10 நாள்களில் சொல்லுவேன்'- வாடிவாசல் குறித்து அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘Bad Girl’. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மிஷ்கின் இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் … Read more

இந்தோனேசியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் ரத்து…

இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகைகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், வன்முறையாக மாறி, ஆறு பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஜகார்த்தா உட்பட பல நகரங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழகிழமை டெலிவரி டிரைவர் ஒருவரை போலீஸ் வாகனம் மோதிய காட்சி வெளிவந்ததை அடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. மாகாசார் (Makassar) நகரில் கவுன்சில் கட்டிடம் எரிக்கப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர் என்று யோக்யாகார்த்தா பல்கலைக்கழகம் உறுதி செய்தது. கலவரத்தை அடுத்து தனது சீன பயணத்தை ரத்து … Read more

கழிவறை பிரச்னையால் பாட்டில்களில் சிறுநீர் கழித்த பயணிகள்; பறக்கும் விமானத்தில் என்ன நடந்தது?

விர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானத்தில் பயணிகள் சிறுநீரைக் கழிக்க பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பாலியில் உள்ள டென்பசார் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்ற விமானத்தில்தான் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்று பராமரிப்பு பிரச்னை காரணமாகப் புறப்படும் முன்பே அதன் பயன்பாட்டை இழந்திருக்கிறது. மீதமுள்ள கழிப்பறைகளும் ஆறு மணி நேரப் பயணத்திற்குள் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமானத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். விமானம் விமான … Read more

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் மாநகராட்சி அதிகாரிகளை எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியை சேர்ந்த பி.தாமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும், வெவ்வேறு காரணங்களை கூறி, அவற்றை நிறைவேற்ற தவறியதாக சென்னை … Read more

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: தண்ணீர் அருந்தப் போவதில்லை என மனோஜ் ஜாரங்கி சபதம்

மும்பை: மராத்தா சமூகத்துக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, 4 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் மனோஜ் ஜாரங்கி இன்று முதல் தண்ணீர் அருந்துவதை நிறுத்துவதாக சபதம் செய்துள்ளார். ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜாரங்கி நடத்தி வருகிறார். இதுகுறித்து … Read more