நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது? கனடாவுக்கு டிரம்ப் மீண்டும் அழைப்பு

வாஷிங்டன்,

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த சமயத்தில் கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து கருத்து பதிவிட்ட டிரம்ப், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள்.

கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரிஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும்” என்று பதிவிட்டார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது என்று கனடாவுக்கு டிரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், “அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome எனும் வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.