ILT20 Auction 2025: இந்தியாவில் ஐபிஎல் தொடரை போன்று ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது.
Add Zee News as a Preferred Source
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் – BBL, தென்னாப்பிரிக்காவில் SA20, அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் – MLC, மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் – CPL, இங்கிலாந்து The Vitality Blast, The Hundred என பல பிரபலமான டி20 தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன.
ILT20 Auction 2025: 6 அணிகள்
அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ILT20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் தொடங்கிய ILT20 தொடர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று சீசன்கள் நடைபெற்றுள்ளன. அபுதாபி நைட் ரைடர்ஸ், டெசர்ட் வைப்பர்ஸ், துபாய் கேப்பிடல்ஸ், கல்ஃப் ஜெயின்ட்ஸ், எம்ஐ எமிரேட்ஸ், ஷார்ஜா வாரியர்ஸ் என மொத்தம் 6 அணிகள் இத்தொடரில் விளையாடுகின்றன.
ILT20 Auction 2025: ஏலத்தில் பதிவு செய்துள்ள இந்திய வீரர்கள்
2023இல் கல்ஃப் ஜெயின்ட்ஸ் அணியும், 2024இல் எம்ஐ எமிரேட்ஸ் அணியும், 2025இல் துபாய் கேப்பிடல்ஸ் அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் நான்கு ஐக்கிய அரபு அமீரக அணி வீரர்கள், 2 குவைத் வீரர்கள், 2 சௌதி அரேபியா வீரர்களை நிச்சயம் எடுத்திருக்க வேண்டும்.
இந்நிலையில், அடுத்த 2026 ILT20 சீசனுக்கான ஏலம் இன்று துபாயில் நடைபெற்றது. இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரை தாண்டி வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடுவது மிக மிக அரிது. அப்படியிருக்க, இந்த 2026 ILT20 தொடருக்கான ஏலத்தில் சில இந்திய வீரர்களும் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, ரவிசந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், பியூஷ் சாவ்லா, அன்கித் ராஜ்புத், சித்தார்த் கௌல், பிரியங்க் பாஞ்சல் போன்ற ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
ILT20 Auction 2025: ஏலம் போகாத அஸ்வின்
அதிலும் அஸ்வின் 1,20,000 அமெரிக்க டாலர்களை அடிப்படை தொகையாக நிர்ணயித்திருந்தார். இதுதான் இந்த ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை தொகையாகும். மேலும் இவர்தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் வகையில், வெளிநாட்டவர்களுக்கான முதல் செட்டில் இடம்பெற்றிருந்த ரவிசந்திரன் அஸ்வினை யாருமே ஏலம் கேட்கவில்லை. இதனால் அவர் Unsold என அறிவிக்கப்பட்டார். கடைசியாக Unsold வீரர்களை Acclerated செட்டில் ஏலம் விட்டார்கள். ஆனால், அந்த செட்டில் ரவிசந்திரன் அஸ்வினின் பெயரே இல்லை. இதன்மூலம் அஸ்வினை கடைசி வரை யாருமே ILT20 ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ILT20 Auction 2025: ஏலம் போகாத மற்ற வீரர்கள்
அஸ்வின் மட்டுமின்றி நட்சத்திர வீரர்களான ஜேசன் ராய், ஜேம்ஸ் ஆண்டர்சன், சயிம் அயூப், டெம்பா பவுமா ஆகியோரையும் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதேநேரத்தில், சித்தார்த் கௌல், அங்கித் ராஜ்புத், பிரியங்க் பாஞ்சல் போன்றரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஆனால், தினேஷ் கார்த்திக்கை ஷார்ஜா வாரியர்ஸ் அணியும், பியூஷ் சாவ்லாவை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
ILT20 Auction 2025: அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 5 வீரர்கள்
ILT20 2025 ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 5 வீரர்களை இங்கு காணலாம். எம்ஐ எமிரேட்ஸ் அணி ஆண்ட்ரே பிளெட்சரை 2,60,000 (ரூ. 2.3 கோடி) அமெரிக்க டாலருக்கு எடுத்துள்ளது. இவர்தான் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் ஆவார். இவர் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஆவார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்காட் கர்ரியை துபாய் கேப்பிடல்ஸ் அணி 2,50,000 அமெரிக்க டாலருக்கும் (ரூ.2.2 கோடி); ஐக்கிய அரபு அமீரகம் அணியை சேர்ந்த ஜுனைத் சித்திக்கை ஷார்ஜா வாரியர்ஸ் அணி 1,70,000 அமெரிக்க டாலருக்கும் (ரூ.1.5 கோடி); இங்கிலாந்தைச் சேர்ந்த லியாம் டாசனை, கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி 1,70,000 அமெரிக்க டாலருக்கும் (ரூ.1.5 கோடி), ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது ரோஹித் கானை எம்ஐ எமிரேட்ஸ் அணி 1,40,000 அமெரிக்க டாலருக்கும் (ரூ.1.5 கோடி) என அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் ஆவர்.