அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஓர் பயிற்சியாக ஆசிய அளவிலான ஆசிய கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 9வது முறையாக பாகிஸ்தான் ஆசிய கோப்பையை வென்றது.
Add Zee News as a Preferred Source
இந்த சூழலில், பாகிஸ்தான் வாரிய தலைவர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர் பகல்காமில் அப்பாவி மக்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கர வாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தனர். இறுதியில் இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததால் வழங்கப்படவில்லை என ஆசிய கவுன்சில் தெரிவித்தது.
ஆசிய கவுன்சில் தலைவர் மோசின் கையில் இருந்து இந்திய அணி கோப்பையை வாங்க ம்றுத்தது குறித்து ரசிகர்கள் பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், விளையாட்டில் அரசியலை கலக்கும் வகையில் ஆசிய கவுன்சில் தலைவர் கையில் இந்திய அணி கோப்பையை வாங்காமல் போனது முறையல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஏபி டி வில்லியர்ஸ், கோப்பையை யார் கொடுக்கிறார் என்பதில் இந்திய அணி மகிழ்ச்சியாக இல்லை. விளையாட்டை அதனுடைய வழியில் கொண்டாட வேண்டும். அவை அரசியலுக்கு அப்பாற்ப்பட்டவை. ஆனால் நடந்ததை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதை பார்த்ததை நான் வெறுக்கிறேன். ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து கோப்பையை வாங்காமல் சென்றது முறையல்ல. வரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
இந்திய அணி மிகவும் வலிமையாக காணப்படுகிறது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு அவர்கள் தங்களை வலுப்படுத்து வருகின்றனர். ஏராளமான திறைமையை கொண்டுள்ள இந்திய அணி பெரிய தருணங்களில் சிறப்பாக விளையாடுகின்றன. இவ்வாறு ஏபிடி தெரிவித்தார்.
About the Author
R Balaji