IND vs WI 1st Test Live Scorecard: ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய மண்ணில் மொத்தம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் விளையாடுகின்றன.
Add Zee News as a Preferred Source
IND vs WI: WTC தரவரிசையில் இரு அணிகள்
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையின்படி, இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி, 1 டிரா என 28 புள்ளிகள் மற்றும் 46.67 புள்ளிகள் சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து 6வது இடத்திலும் உள்ளது.
IND vs WI Test Live: 14 ஆண்டுகளுக்கு பின்…
இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் இல்லாமல் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக உள்நாட்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கி உள்ளது. சுப்மான் கில் உள்நாட்டில் கேப்டனாக செயல்படும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். மேலும், இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக செயல்படுகிறார்.
IND vs WI Live: வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா?
மேலும், 1983ஆம் ஆண்டில்தான் மேற்கு இந்திய தீவுகள் இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. அதன் பிறகு இந்திய அணிதான் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான அனைத்து உள்நாட்டு தொடர்களையும் கைப்பற்றியிருக்கிறது. இருப்பினும், கடந்தாண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக வைட்வாஷ் ஆனதால் தற்போது இந்திய அணி மீண்டும் உள்நாட்டில் தனது வெற்றிப் பயணத்தை தொடங்க முயற்சிக்கும்.
IND vs WI Live: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் – நேருக்கு நேர்
இன்று காலை 9.30 மணிக்கு போட்டியின் முதல் செஷன் தொடங்கும். அதன்பின் மதியம் 12 மணிக்கு மதிய உணவு இடைவேளை வரும். மதியம் 12.40 மணிக்கு 2வது செஷன் தொடங்கும். மதியம் 2.10 மணிக்கு தேநீர் இடைவேளை வரும். மதியம் 2.30 மணிக்கு 3வது செஷன் தொடங்கும். மூன்றாவது செஷன் மாலை 5 மணிவரை நடைபெறும். இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணி மொத்தம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் மேற்கு இந்திய தீவுகள் அணி 30 போட்டிகளிலும், இந்தியா 23 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
IND vs WI: இந்தியா முதலில் பந்துவீச்சு
அந்த வகையில், இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் டாஸ் வீசப்பட்டது. டாஸை வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ரோஸ்டன் சேஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பந்துவீசும். குல்தீப் – ரவீந்திர ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர் என மூன்று ஸ்பின்னர்களுடனும்; பும்ரா – சிராஜ் – நிதிஷ்குமார் ரெட்டி என மூன்று வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்களுடனும் இந்திய அணி விளையாட உள்ளது. விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் விளையாடுகிறார். சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு அணிகளின் பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.
IND vs WI Live: இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில்(கேப்டன்), துருவ் ஜூரல்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
மேற்கு இந்திய தீவுகள்: டேகனரைன் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல், அலிக் அதானாஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ்(கேப்டன்), ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜோமெல் வாரிக்கன், காரி பியர், ஜோஹன் லெய்ன், ஜேடன் சீல்ஸ்.
IND vs WI Live: லைவ் ஸ்கோர் கார்டு பார்க்க…
மேலும் போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால், ஜீ தமிழ் நியூஸ் ஊடகம் அதற்கு சிறப்பு ஏற்பாடை செய்துள்ளது. ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் பேஸ்புக் மற்றும் யூ-ட்யூப் பக்கங்களில் லைவ் ஸ்கோர் கார்டு நேரலையில் ஒளிபரப்பாகும். அதில் போட்டியின் ஸ்கோர், போட்டியின் ஓவர்கள், களத்தில் பேட்டிங் செய்யும் பேட்டர்களின் ரன்கள், பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் உள்ளிட்ட விவரங்களை நீங்கள் உடனுக்குடன் காணலாம். ஒவ்வொரு பந்திலும் என்ன நடக்கிறது என்பதும் தனியாக தெரியும். எனவே போட்டி நடைபெறும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
பேஸ்புக் லைவ் லிங்க்:
IND vs WI Live: போட்டி நேரலையை எப்படி பார்க்க?
இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை தொலைக்காட்சியில் Star Sports சேனல்களிலும், மொபைலில் JioHotstar தளத்திலும் காணலாம்.