இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான எம். எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி டிராபியை பெற்றுத் தந்துள்ளார் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தி 5 ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார். மிகவும் அனுபவம் வாய்ந்த தோனி, இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் இருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமாக இருந்து வருகிறார்.
Add Zee News as a Preferred Source
அதே போல், அவரது தலைமையின் கீழ் கிரிக்கெட் வீரர்கள் பலர் அசைப்படுவதும் உண்டு. அந்த வகையில், தமிழக வீரர் சாய் கிஷோர் ஆரம்ப காலங்களில் தோனி தலைமையின் கீழ் விளையாட சிஎஸ்கே அணியில் தேர்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் குஜராத் அணியால் வாங்கப்பட்டார். அங்கு அந்த அணியில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி அந்த அணியில் நிலைத்து வருகிறார்.
கடந்த 2025 டிஎன்பிஎல் கோப்பையை சாய் கிஷோர் தலைமையில் திருப்பூர் அணி முதல் முறையாக வென்றது. இந்த நிலையில், தான் எம். எஸ் தோனியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் அவர் சமூக வலைத்தளங்களில் கானப்படும் விமர்சனங்களை தவிர்ப்பதற்கு ஃபோனை கையில் வைத்துக்கொள்ள மாட்டார் என்றூம் சாய் கிஷோர் கூறி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய தமிழக வீரர் சாய் கிஷோர், தோனியிடம் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எப்போது தன்னுடைய ஃபோனை கையில் வைத்துக்கொள்ள மாட்டார். மைதானத்திற்கு வரும்போது அவருடைய ஃபோனை ஹோட்டலிலேயே வைத்துவிடுவார். இதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அது எனக்கு ஓரு ஊக்கமாக இருந்தது. ஏனென்றால், சமூக வலைத்தளங்களில் ஈடுபட்டு கொள்வது உனக்கு தேவையா என்பதை என்னிடம் நானே கேட்டுக்கொள்வேன். தோனியை பார்த்து கற்றுக்கொண்டதை நான் தற்போது பின்பற்றி வருகிறேன் என தெரிவித்தார்.
தமிழக வீரர் சாய் கிஷோர், இந்திய டி20 அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 3 போட்டிகளில் இதுவரை விளையாடி இருக்கிறார். அதில் அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். பின்னர் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைக்கப்பெறாததால், மீண்டும் இந்திய அணிக்குள் எப்படியாவது நுழைந்து தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று தற்போது அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji