சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனத்தின் வி60e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் வி60e ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘வி’ வரிசை போன்களுக்கு இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பயனர்களுக்கென பிரத்யேக ஏஐ அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. விவோ வி60e: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
- 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7360 டர்போ சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- பின்பக்கத்தில் 200 + 8 மெகாபிக்சல் என இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- 6,500mAh பேட்டரி
- 90 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
- ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
- 8ஜிபி / 12ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இந்த போனின் விலை ரூ.29,999 என உள்ளது