சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டுள்ளோம் என தவெக நிர்வாகி தெரிவித்துள்ளார். கடந்த செப்.27ஆம் தேதி கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு உள்ளது. இந்த […]
