சென்னை: கரூர் கூட்ட நெரிசல், அதனால் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விமர்சித்த நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் […]