சோஹோ மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: மின்னஞ்சல் வழியாக கடித போக்குவரத்துகளை மேற்கொள்ள உள்நாட்டு நிறுவன தயாரிப்பான சோஹோ மெயிலுக்கு தான் மாறிவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் சோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். எனது மின்னஞ்சல் முகவரியை குறித்துக்கொள்ளுங்கள். எனது புதிய மின்னஞ்சல் முகவரி [email protected]. எதிர்காலத்தில் மின்னஞ்சல் வழியாக கடிதப் பரிமாற்றம் செய்ய இந்த முகவரியைப் பயன்படுத்தவும். இந்த விஷயம் குறித்து கவனித்ததற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporation-ஆல் உருவாக்கப்பட்டது Zoho Mail. 2008-ல் தொடங்கப்பட்ட Zoho Mail, வலுவான தனியுரிமை தரநிலைகள் மற்றும் தரவு பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது என்றும், பயனர்கள் தனியுரிமை சார்ந்த இலவச மின்னஞ்சல் அனுபவத்தைத் தேடுவதால் ஜி-மெயிலுக்கு மாற்றாக Zoho Mail பிரபலமடைந்து வருகிறது என்றும் உள்நாட்டு ஆக்கங்களை விரும்புவோர் தரப்பு கூறுகிறது.

கம்ப்​யூட்​டரில் நாம் மேற்​கொள்​ளும் அலு​வலக பணி​களுக்​கெல்​லாம் நாம் வெளி​நாட்டு நிறு​வனங்​களின் மென்​பொருட்​களை​தான் பயன்​படுத்தி வரு​கிறோம். இந்​நிலை​யில், சுதேசிக்கு மாறுமாறு மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதனால், இந்திய தயாரிப்புகளுக்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுதேசியை பிரபலப்படுத்தும் முயற்சியாக அமித் ஷாவின் அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சோஹோ ஆபிஸ் தளத்தை பயன்படுத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் தனது துறையின் அனைத்து அலுவலகங்களுக்கும் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், “சோஹோ​வின் உள்​நாட்டு ஆபிஸ் ஆன்​லைன் மென்​பொருட்​களை பயன்​படுத்​து​வதன் மூலம், சுதேசி இயக்​கத்​தில் நாம் தைரிய​மான நடவடிக்​கையை எடுக்கிறோம். உள்​நாட்டு புது​மை​யுடன் இந்​தியா முன்​னேற நாம் அதி​காரம் அளிக்​கிறோம். இதன் மூலம் உள்​நாட்டு டிஜிட்​டல் கட்​டமைப்பு வலு​வடைந்​து, நமது தரவு​கள் பாது​காப்​புடைய​தாக​வும், தற்​சார்​புடைய​தாக​வும் இருக்​கும்.

இந்த மாற்​றம், உலகளா​விய டிஜிட்​டல் பொருளா​தா​ரத்​தில், இந்​தி​யா​வின் நிலைப்​பாட்டை வலுப்​படுத்​தும். சேவை பொருளா​தா​ரம் என்ற நிலை​யி​லிருந்து உற்​பத்தி தேசம் என்ற நிலைக்கு நாடு செல்ல உதவும். மத்​திய கல்​வித் ​துறை அமைச்​சகத்​தின் கீழ் பணி​யாற்​றும் அனைத்து அதி​காரி​களும், அனைத்து அலு​வலக ஆவணங்​களுக்​கும் சோஹோ ஆபிஸ் தளத்தை பயன்​படுத்த வேண்​டும். சோஹோ ஆபிஸ் தற்​போது என்​ஐசி மெயிலுடன் ஒருங்கிணைக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் தனி லாகின் அல்​லது பதி​விறக்​கங்​கள் தேவையில்​லை.

சோஹோ​வின் அனைத்து மென்​பொருள் உபகரணங்​களை​யும் பயன்​படுத்​தும் முறை​களை அதி​காரி​கள் தெரிந்து வைத்​திருக்க வேண்​டும். தொழில்​நுட்ப உதவிக்கு சிபிஐஎஸ் / என்​ஐசி பிரிவை தொடர்பு கொள்ள வேண்​டும்” என தெரிவிக்​கப்​பட்டிருந்தது. சோஹோவின் அரட்டை செயலியும் சமீபகாலமாக பிரபலமடைந்து வருகிறது. வாட்ஸ்அப்புக்கு மாற்றாக ஒரு தரப்பினரால் அரட்டை செயலி பயன்படுத்தப்படுகிறது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.