பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை 32 மீட்டர் ஆழத்தில் அமைகிறது

புதுடெல்லி: நாட்​டில் முதல் முறை​யாக அசாம் மாநிலத்​தில் பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் சுரங்​கப்​பாதை அமைக்​கும் திட்​டத்​துக்கு அறிக்கை தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. ரூ.6,000 கோடி மதிப்​பிலான இத்​திட்​டத்​துக்கு மத்​திய அமைச்​சரவை விரை​வில் ஒப்​புதல் அளிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அசாம் மாநிலத்​தில் நுமலிகர் என்ற இடத்​திலிருந்து கோஹ்பூர் வரை, பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் சுரங்​கப்​பாதை அமைப்​ப​தற்​கான திட்​டம் ரூ.6,000 கோடி மதிப்​பீட்​டில் தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. இது ஆற்​றுக்கு கீழே அமைக்​கப்​படும் நாட்டின் முதல் சுரங்​கப்​பாதை திட்​ட​மாகும். சீன எல்லை அருகே அருணாச்​சலப் பிரதேசத்தை ஒட்டி அமைக்​கப்​படும் இந்த சுரங்​கப்​பாதை 33.7 கி.மீ நீளத்​துக்​கும், பிரம்​மபுத்​திர நதி​யின் கீழ் 32 மீட்​டர் ஆழத்​தி​லும் அமைக்​கப்​பட​வுள்​ளது. இத்​திட்​டம் நிறைவு பெற 5 ஆண்டு ஆகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தயார் நிலை​யில் இருக்​கும் இந்த சுரங்​கப்​பாதை திட்​டம் மத்​திய அமைச்​சர​வை​யில் விரை​வில் சமர்ப்​பிக்​கப்​பட​வுள்​ளது. பிரதமர் தலை​மையி​லான கட்​டமைப்​புக்​கான அமைச்​சரவை குழு இத்​திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த ஒப்​புதல் கிடைத்​தவுடன் பிரம்​மபுத்​திரா நதிக்கு கீழ் சுரங்​கப்​பாதை அமைப்​ப​தற்​கான பணிக்கு அடிக்​கல் நாட்​டப்​படும். இந்த சுரங்​கப்​பாதையை தேசிய நெடுஞ்​சாலை மற்​றும் கட்​டமைப்பு மேம்​பாட்டு நிறு​வனம் (என்​எச்​ஐடசிஎல்) அமைக்​க​வுள்​ளது. இத்​திட்​டத்​துக்கு வனவிலங்கு வாழ்வு நிலைக்​குழு​வுக்​கான தேசிய வாரி​யம் சம்​மதம் தெரி​வித்​துள்​ளது. மேலும் இந்த சுரங்​கப்​பாதை திட்​டத்​தால், மண்​ணின் நிலைத்​தன்​மை, நிலத்​தடி நீர் ஓட்​டம், படிம அமைப்​பு முறை போன்​றவற்​றில் ஏற்​படும் பாதிப்பு குறித்த அறி​வியல் மதிப்பீட்​டை​யும் அது கேட்​டுள்​ளது.

இந்​தச் சுரங்​கப்​பாதை திட்​டத்​துக்​கான அறிக்​கையை மத்​திய சாலை போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத்​துறை அமைச்​சகம் தொழில்​நுட்ப குழு​வின் ஆய்​வு​களுக்​குப்​பின் தயார் செய்​துள்​ளது. பாது​காப்பு காரணங்​களுக்​காக பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் இந்த சுரங்​கப்​பாதை அமைக்​கப்​படு​கிறது.

இத்​திட்​டம் குறித்து அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஏற்​கெனவே அளித்த பேட்​டி​யில், ‘‘ஆற்​றுக்கு மேல் பல பாலங்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.
ஆற்​றுக்கு கீழ் நாம் ஏன் சுரங்​கப்​பாதை அமைக்கக் கூடாது என்ற எண்​ணம் எனக்கு ஏற்​பட்​டது? ஜம்மு காஷ்மீரில் மலைக்கு கீழே அடல் சுரங்கப்பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல் பிரம்​மபுத்​திர நதிக்கு கீழே நம்​மால் சுரங்​கப்​ பாதை அமைக்க முடி​யுமா என நான் எண்​ணினேன். தற்​போது அதற்​கான திட்​ட அறிக்​கை த​யார்’’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.