Virat Kohli Net Worth: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளை கடந்து கிங்காக வளம் வருகிறார். இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாட்டுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று தந்த பெருமை இவரை சேரும். தோனிக்கு அடுத்து இந்திய அணியை வழி நடத்தியும் வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
Add Zee News as a Preferred Source
பின்னர் சில காரணங்களால் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகி அணியில் ஒரு வீரராக மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவை எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஃபுளு ஜெர்சியில் விராட் கோலி களமிறங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு என்ன? அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்? என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
சொத்து மதிப்பு
உலகளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கிரிக்கெட் மைதானத்திலும் வெளியேயும் அவரது வெற்றியைப் பிரதிபலிக்கும் கணிசமான நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது நிகர மதிப்பு சுமார் ரூ. 1,050 கோடி (தோராயமாக 126 மில்லியன் டாலர் முதல் 127 மில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஒப்பந்தங்கள்
விராட் கோலி பிசிசிஐ-யின் வருடாந்திர சம்பளமாக ரூ. 7 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான ஐபிஎல் ஒப்பந்தத்தின் மூலம் தோராயமாக ரூ. 15 கோடியும் பெறுகிறார்.
விளம்பரம்: விராட் கோலி இதை தவிர்த்து விளம்பரங்கள் மூலமும் சம்பாதித்து வருகிறார். ஒரு ஒப்புதலுக்கு சுமார் ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை பெறுகிறார். இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ. 200 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது.
ரூ. 34 கோடி மதிப்புள்ள வீடு
விராட் கோலிக்கு மும்பையில் சுமார் ரூ. 34 கோடி மதிப்புள்ள விடும், குர்கானில் சுமார் ரூ. 80 கோடி மதிப்புள்ள மற்றொரு வீடும் உள்ளதாக கூறப்படுகிறது.
சொகுசு கார்கள்
விராட் கோலி ஆடம்பரமான வாழ்க்கை முறையை விரும்புகிறார், அதில் ஆடம்பர கார்கள் மற்றும் உயர் ரக சொத்துக்கள் அடங்கும். அவர் ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ (Audi and BMW) கார்களை வைத்திருக்கிறார். அவர் 12 சொகுசு கார்கள் வைத்திருப்பதாக தெரிகிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் 250 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலவர்ஸ்களை கொண்டுள்ளார்.
பிசிசிஐ சம்பளம்
விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கீழ் ஏ+ கிரேடு வீரராக உள்ளார், அவரது தேசிய ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு தோராயமாக ரூ. 7 கோடி சம்பாதிக்கிறார்.
போட்டி கட்டணம்:
டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ. 15 லட்சம் பெற்றார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு (ஒருநாள் போட்டிகள்) ரூ. 6 லட்சம் பெற்று வருகிறார்.
டி20 போட்டிகளுக்கு ரூ. 3 லட்சம் பெற்றார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் ஓய்வு பெறாமல் இருப்பதால், அதற்குரிய சம்பளத்தை மட்டுமே பெறுவார். மேலும், இதை தவிர்த்து ஆட்ட நாயன், தொடர் நாயக்ன் விருது போன்றவற்றில் இருந்தும் கூறுதலாக சம்பாதிக்கலாம்.
ஐபிஎல் சம்பளம்
ஐபிஎல் தொடங்கியதிலிருந்து கோஹ்லி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் இருந்து வருகிறார், இந்த உரிமையாளரிடமிருந்து ஆண்டுதோறும் சுமார் ரூ. 15 கோடி சம்பாதிக்கிறார்.
About the Author
R Balaji