சென்னை: 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அந்த நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு லைசென்சை அதிரடியாக ரத்து செய்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம் உள்பட பல்வேறு […]
