IND vs WI: 2வது டெஸ்ட் போட்டியில் இந்த 3 வீரர்களுக்கு ஓய்வு! அணியில் அதிரடி மாற்றம்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 10 முதல் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னணி வேகப்பந்து வீரர் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படாலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணி கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் யார் யார் விளையாட வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Add Zee News as a Preferred Source

Focused faces 

 from #TeamIndia’s training session in New Delhi ahead of the  #INDvWI Test!

@IDFCFIRSTBank pic.twitter.com/MEKhkTmgHv

— BCCI (@BCCI) October 8, 2025

ஜஸ்பிரிட் பும்ராவின் ஓய்வு

முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார் ஜஸ்பிரிட் பும்ரா. இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகும் விதத்தில் அவருக்கு 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு வழங்கப்படலாம். பும்ரா ஓய்வுக்கு சென்றால், அந்த இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர வாய்ப்பு உள்ளது. கடைசியாக ஆடிய இங்கிலாந்து தொடரில் பிரசித் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அவர் தனது வேகப்பந்து திறமையை 2வது டெஸ்ட் போட்டியில் கொண்டு வரலாம். மேலும், சிராஜ் ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்ற செய்திகளும் வருகிறது. அவரும் ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெற உள்ளதால் ஓய்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் புதிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

அணியின் மற்ற மாற்றங்கள்

விக்கெட் கீப்பராக முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரேல் தொடர்ந்து அணியில் விளையாடுவார். முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில் அரை சதம் அடித்து இருந்த நிலையில், சாய் சுதர்சனுக்கு பதில் தேவதத் படிக்கல் இடம் பெற வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டர்கள் தொடர்ந்து விளையாட உள்ளனர். தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகளும் உள்ளது. இந்த மாற்றங்கள் இந்திய அணிக்கு புதிய உயிர் ஊட்டமாக அமையும் என கருதப்படுகிறது. பழைய வீரர்களுக்கு ஓய்வளித்து, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தல் அணியின் ஆற்றலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவின் உத்ததேச 11

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.