வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே UPI பேமென்ட் செய்யலாமா? புதிய வசதி

UPI Payment : வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், UPI மூலம் பேமென்ட் செய்ய முடியுமா? என்று கேட்டால், ஆம்.. முடியும். இப்போது BHIM UPI தளத்தில், உங்களது வங்கிக் கணக்கில் இருப்பு (Balance) இல்லாவிட்டாலும் கூட, பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் ஒரு சிறப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் செய்ய நீங்கள் மூன்றாம் தரப்பு செயலிகளை அழைக்கவோ அல்லது வேறு எந்த ஆப்ஸையும் பயன்படுத்தவோ தேவையில்லை. BHIM UPI வழங்கும் இந்த வசதியின் பெயர் ‘UPI Circle’ ஆகும்.

Add Zee News as a Preferred Source

BHIM UPI-இன் ‘UPI Circle’ வசதி என்றால் என்ன?

UPI Circle என்பது BHIM UPI அப்ளிகேஷனில் புதிதாக வந்துள்ள ஒரு அம்சமாகும். இதன் மூலம், உங்களது UPI கணக்கில் இருந்து, நீங்கள் நம்பகமான நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குப் பணம் செலுத்துவதற்கான அனுமதியை வழங்கலாம்.இந்த வசதி குறிப்பாகப் பெரியவர்கள் அல்லது வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அல்லது தங்கள் கணக்குகளுடன் UPI-ஐப் பயன்படுத்தாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

– பயனர் முதலில் தங்கள் கணக்கில் இருந்து பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்க விரும்பும் நபர்களை இந்த ‘வட்டத்திற்குள்’ (Circle) சேர்க்க வேண்டும்.

– இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பரிவர்த்தனைக்குச் செலவிடக்கூடிய அதிகபட்ச வரம்பை (Limit) பயனரே நிர்ணயிக்க முடியும்.

– மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் முன்கூட்டியே ஒப்புதல் (Approval) வழங்க வேண்டுமா என்பதையும் தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.

– சுருக்கமாகச் சொன்னால், உங்களது கணக்கில் பணம் இருக்கும்போது, அதனை உங்களது நெருங்கிய உறவினர்கள் பயன்படுத்த நீங்கள் அனுமதி வழங்குவதே இந்த ‘UPI Circle’ ஆகும்.

‘UPI Circle’-ஐ அமைப்பது எப்படி?

BHIM UPI செயலியில் ‘UPI Circle’-ஐ அமைக்கும் வழிமுறை எளிமையானது:

– BHIM UPI செயலியைத் திறந்து, “UPI Circle” என்ற விருப்பத்தைத் கிளிக் செய்யவும்.

– அடுத்து, “Add Family & Friends” (குடும்பம் மற்றும் நண்பர்களைச் சேர்) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

– உங்களது கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்ய நீங்கள் அதிகாரம் வழங்க விரும்பும் நபரை அவர்களின் தொலைபேசி எண் மற்றும் UPI ஐடி மூலம் சேர்க்கலாம்.

– அவர்களைச் சேர்த்த பிறகு, உங்களுக்கு “Spend with Limit” (வரம்புடன் செலவிடு) மற்றும் “Approval Required” (ஒப்புதல் தேவை) ஆகிய இரண்டு விருப்பங்கள் தோன்றும்.

– நீங்கள் விரும்பிய விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும்.

– நீங்கள் “Spend with Limit” என்பதைத் தேர்ந்தெடுத்தால், அந்த நபர் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாகச் செலவு செய்ய முடியாது.

– நீங்கள் “Approval Required” என்பதைத் தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனை நடக்கும்போதும், நீங்கள் முன்கூட்டியே அந்தப் பணப் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

– இந்த வசதியை நீங்கள் அமைத்த பிறகு, உங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உங்களது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, நீங்கள் அனுமதித்த வரம்பிற்குட்பட்டுத் தொந்தரவு இல்லாமல் UPI பேமென்ட்களைச் செய்ய முடியும்.

 

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.