Sanju Samson : ஐபிஎல் 2026-க்கான மினி ஏலம் மற்றும் டிரேடிங் அப்டேட் இப்போதே படு சூடாக ஆரம்பித்துள்ளது. பல வீரர்களைப் பற்றிய பேச்சு அடிபட்டாலும், டிரேடிங் மார்க்கெட்டில் ஒரே ஒருவர்தான் ஹாட் டாபிக்காக உள்ளார். அவர்தான் சஞ்சு சாம்சன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் (RR) கேப்டனான சஞ்சு சாம்சன், அணியை விட்டு வெளியேறத் தயாராகிவிட்டார். அவரின் இந்த முடிவு, ஒட்டுமொத்த ஐபிஎல் உலகத்தையும் திருப்பிப் பார்க்க வைத்துள்ளது.
Add Zee News as a Preferred Source
சஞ்சு சாம்சன்: இந்த திடீர் முடிவு ஏன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நீண்ட கால கேப்டனாக சஞ்சு சாம்சன் இருந்தாலும், அவருக்கு அணி நிர்வாகத்துடன் இருந்த உறவு இப்போது சரியில்லை எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் 2025 சீசன் முடிந்த உடனேயே, தன்னை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் (Release) என்று சாம்சன் RR நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்போது ஒரு சீசனுக்கு அவருக்கு ரூ.18 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது. இவரை டிரேடிங் மூலம் ஆர்ஆர் அனுப்பவில்லை என்றால், சாம்சன் ஏலத்திற்குச் செல்ல நேரிடும்.
ட்ரெண்டிங் டிரேடிங் ஆஃபர்கள்
சாம்சனைத் தங்கள் அணிக்கு இழுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இடையே பலப்பரீட்சை நடக்கிறது. சஞ்சு சாம்சனை எப்படியாவது தங்கள் அணிக்குக் கொண்டு வர KKR தீவிரமாக உள்ளது. காரணம், அவர்களுக்கு ஒரு நிலையான இந்திய டாப் ஆர்டர் பேட்டர், விக்கெட் கீப்பர் மற்றும் புதிய கேப்டன் தேவை. இதற்காக, KKR தங்கள் அணி, தங்கள் டீமில் உள்ள இளம் ஆல்-ரவுண்டரும், கடந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவருமான வெங்கடேஷ் ஐயரை சாம்சனுக்காகப் பரிமாற்றம் செய்யத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தோனியின் சகாப்தம் முடிவுக்கு வருவதால், நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்த ஒரு இந்திய வீரரை CSK தேடுகிறது. சஞ்சு சாம்சன் அதற்குப் பொருத்தமானவர். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் சாம்சனுக்குப் பதிலாக சாம் கரன், டெவன் கான்வே, அல்லது சிவம் துபே ஆகியோரில் ஒருவரை CSK பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று RR கோரியதாகத் தகவல். ஆனால், CSK நிர்வாகம், “எங்கள் அணியின் முக்கிய வீரர்களை (Core Players) யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது” என்று உறுதியாகக் கூறி, RR-ன் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இருப்பினும், டிரேடிங் மூலம் வீரர்களைப் பரிமாற்றம் செய்வதற்குப் பதில், சாம்சனை ஏலத்தில் எடுப்பதற்கோ அல்லது ரொக்கப் பரிமாற்றம் (Cash Trade) செய்ய CSK தயாராக இருப்பதாகவும் தகவல்.
ஐபிஎல் 2026 மினி ஏலம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்கள்
இந்த டிரேடிங் நாடகம் ஒருபுறம் இருக்க, ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கான தேதிகள் மற்றும் விதிமுறைகள் வெளியாகியுள்ளன:
மினி ஏலம் விவரம்
* ஏலத் தேதி – டிசம்பர் 13 முதல் 15, 2025 வரை நடக்க வாய்ப்பு
* பிளேயர்களை தக்க வைப்பு காலக்கெடு – நவம்பர் 15, 2025
* ஏல இடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. வெளிநாடுகளுக்குப் பதிலாக இந்தியாவிலேயே ஏலம் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
* அதிக மாற்றங்கள் – கடந்த சீசனில் மோசமாக விளையாடிய CSK மற்றும் RR ஆகிய அணிகள் தங்கள் அணியில் இருந்து பல வீரர்களை ரிலீஸ் செய்து, ஏலப் பணத்தை அதிகரிக்க முயற்சி
* கவனிக்க வேண்டிய வீரர் சஞ்சு சாம்சன் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ஏலத்தில் மிகப்பெரிய தொகையைப் பெற வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் டிரேடிங்கில் செல்வாரா அல்லது ஏலத்தில் அனல் பறக்க விடுவாரா என்பது நவம்பர் 15-க்குள் தெரிந்துவிடும்.
About the Author
S.Karthikeyan