சான்டியாகோ,
சிலி நாட்டின் தெற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து கேப் ஹார்ன் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
தென்அமெரிக்காவின் தெற்கு பகுதியிலும், தென்அமெரிக்கா மற்றும் அன்டார்டிகாவுக்கு இடைப்பட்ட பகுதியான டிரேக் நீர்வழியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் சிலி நாட்டில் இருந்தும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், சில மணிநேரத்திற்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது.
Related Tags :