சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் காணப்படும் 3400 சாலைகளின் சாதிப் பெயர்கள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக துணைமேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 100 சதவிகிதம் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறினார். தமிழக அரசு சாதிப்பெயர்களை மாற்ற அரசாணை வெளியிட்ட நிலையில் சென்னையில் மட்டும் 3400 சாலைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அதன்படி, சாதிப் பெயர்கள் குடும்பப் பெயர்களாக இருந்தால், அவை சுருக்கப்பட்டு முதலெழுத்துக்களாக மாற்றப்படும். பெயர்கள் முழுவதும் சாதிப் பெயர்களாக இருந்தால், […]
