மணிலா,
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் மிண்டனோ தீவில் நேற்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிலிப்பைன்சில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 72 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.