India Upcoming Matches: ஐபிஎல் தொடரில் விளையாடியதற்கு பின்னர் இந்திய வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினர். அதன் பின்னர் ஆசிய கோப்பை தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துள்ளனர். இதையடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கின்றனர். இப்படி இந்திய வீரர்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு வரை பிஸியாகவே உள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் அடுத்தடுத்த போட்டிகள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்.
Add Zee News as a Preferred Source
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள்
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு அந்நாட்டு அனியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் விளையாட இருக்கின்றனர். இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19 பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து அக்டோபர் 23ஆம் தேதி இரண்டாவது போட்டி அடிலெய்டில், மூன்றாவது போட்டி 25ஆம் தேதி சிட்னியிலும் நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. 29ஆம் தேதி முதல் போட்டி நடைபெற இருக்கிறது. பின்னர் அக்டோபர் 31, நவம்பர் 2, 6 மற்றும் 8ஆம் தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகள்
இத்தொடரை முடித்த கையோடு இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது. முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை கெளகாத்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் நவம்பர் 30, டிசம்பர் 3 மற்றும் 6ஆம் தேதிகளிலும் 5 டி20 போட்டிகள் டிசம்பர் 9, 11, 14, 17 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள்
ஜனவரி மாதம் நியூசிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்திய மண்ணில் மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் போட்டிகள் ஜனவரி 11, 14 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து 21, 23, 25, 28 மற்றும் 31ஆம் தேதிகளில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.
About the Author
R Balaji