Two Players Ruled Out From Ind vs Aus Odi: இந்திய கிரிக்கெட் அணி இன்றுடன் (அக்டோபர் 14) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
முதலில் ஒருநாள் தொடர் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இத்தொடரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட இருப்பதால், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதேசமயம் புதிய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருப்பதாலும் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெர்த்தில் இந்தியாவுக்கு எதிரான முதல் உள்நாட்டு ஒருநாள் போட்டியில் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா மற்றும் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் விலகி உள்ளனர். இது ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அணியை அறிவித்தது. இந்த சூழலில், முக்கிய வீரர்களான ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் விலகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆடம் ஜாம்பா தனிப்பட்ட காரணங்களால் விலகி இருப்பதாகவும், ஜோஷ் இங்கிலிஸ் கன்று தசை வலியிலிருந்து மீண்டு வருவதால் விலகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் பதிலாக மேத்யூ குஹ்னெமன் மற்றும் ஜோஷ் பிலிப் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் அடிலெய்டில் நடைபெறவிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலிஸ் விளையாடமாட்டார். அப்போது அலக்ஸ் கேரி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இங்கிலிஸ் குணமடைவார் என தெரிகிறது.
ஒருநாள் தொடருக்கான இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள்
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
About the Author
R Balaji