தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிரிக்கெட்டர் சாய் சுதர்சன். இவர் மாநில கிரிக்கெட்டில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியதன் மூலம் கடந்த 2022ஆம் தேதி ஐபிஎல்லில் அறிமுகமாகி விளையாடி வருகிறார். குஜராஜ் டைட்டன்ஸ் அணி அவரை ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. அதன் பின்னர் அவரை தங்களது அணியில் தக்கவைத்துக்கொண்டது. இதுவரை சாய் சுதர்சன் 40 போட்டிகளில் விளையாடி 1893 ரன்களை குவித்து உள்ளார். இதில் 2 சதம் மற்றும் 12 அரைசதங்களும் அடங்கும். தற்போது குஜராத் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.
Add Zee News as a Preferred Source
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்த சாய் சுதர்சனுக்கு 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்து. அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்த நிலையில், தற்போது 3வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார். டெஸ்ட்டில் தொடக்கத்தில் இருந்தே அவர் தடுமாறிய நிலையில், அவரது இடத்திற்கு பிரச்சனை வருமோ என அச்சம் ஏற்பட்டது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் அடித்து தன்னை நிரூபித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், நேற்றைய போட்டியின்போது, சாய் சுதர்சனை நோக்கி ரசிகர்கள், நீங்கள் குஜராத் அணியில் இருந்து சென்னை அணிக்கு வந்து விடுங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவரை சென்னை ரசிகர்கள் விரும்புகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நல்ல ஒரு பேட்ஸ்மேனுக்கான தேவை உள்ளது. அதே சமயம் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடிய நிலையில், வரும் 2026 ஐபிஎல் சீசனில் அந்த அணிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும், அவர்கள் மினி ஏலத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த சூழலில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பலரும் அவருக்கு அழைப்பு விடுத்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
About the Author
R Balaji