லாகூர்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .
. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி கடைசி 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் (20 ரன்), வியான் முல்டர் (17 ரன்) சீக்கிரம் வீழ்ந்தாலும் ரையான் ரிக்கெல்டனும், டோனி டி ஜோர்ஜியும் அரைசதம் அடித்து சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்களுடன் வலுவாக இருந்த தென்ஆப்பிரிக்கா கடைசி ஒரு மணி நேரத்தில் சறுக்கியது. ரிக்கெல்டன் 71 ரன்னிலும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 8 ரன்னிலும், டிவால்ட் பிரேவிஸ் ரன் ஏதுமின்றியும், கைல் வெரைன் 2 ரன்னிலும் அடங்கினர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்கா 67 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. டோனி ஜி ஜோர்ஜி (81 ரன்), முத்துசாமி (6 ரன்) களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நமன் அலி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இன்னும் 162 ரன் பின்தங்கியுள்ள தென்ஆப்பிரிக்கா இன்று 3-வது நாளில் தொடர்ந்து விளையாடும்.