சென்னை: விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தடை செய்யாவிட்டால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம் என விஜய் டிவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார். […]
